கூகுள் நிறுவனத்தின் பணிநீக்கத்தால் அதன் முன்னாள் ஊழியர்கள் அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டு வரும் வேளையில் சுந்தர் பிச்சையின் சம்பளம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2021 ஆம் ஆண்டில் வெறும் 6 மில்லியன் டாலர் சம்பளம் வாங்கிய சுந்தர் பிச்சை 2022ல் 218 மில்லியன் டாலர் அளவிலான சம்பளத்தை பெற்றுள்ளார். சுந்தர் பிச்சை சம்பளம் குறித்து முழுமையாக தெரிந்துக்கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்.
சுந்தர் பிச்சை சம்பளம் உயர்வு குறித்து வெளியான தகவலில் முக்கியமான விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது மட்டும் அல்லாமல் சுந்தர் பிச்சை வீடு குறித்த தகவல்களும் இப்போது டிரெண்டாகி வருகிறது. சுந்தர் பிச்சை வீட்டில் அப்படி என்ன ஸ்பெஷல்..? முகேஷ் அம்பானியின் 2 பில்லியன் டாலர் மதிப்புடைய வீட்டை காட்டிலும் சுந்தர் பிச்சையின் வீடு எந்த அளவுக்கு சிறப்பு..?

சுந்தர் பிச்சை தனது காதல் மனைவி அஞ்சலி பிச்சை மற்றும் இரண்டு குழந்தைகள் உடன் கலிபோர்னியாவில் Los Altos பகுதியின் மலை உச்சியில் சுமார் 31.17 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஆடம்பர வீட்டில் வசித்து வருகிறார். சுமார் 40 மில்லியன் டாலர் மதிப்பிலான தொகைக்கு வாங்கிய சுந்தர் பிச்சை சுமார் 49 கோடி ரூபாய்க்கு இன்டீரியர் டிசைனிங் மட்டும் செய்துள்ளார்.
முகேஷ் அம்பானியின் மும்பை அண்டாலியா வீடு 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகைக்கு மதிப்பிடப்பட்டாலும், இந்த வீட்டின் பரப்பளவு என்னவோ வெறும் 400000 சதுரடி தான். இதை ஏக்கர் அளவில் கணக்கிட்டால் 10 ஏக்கருக்கும் சற்று குறைவு.
டெக் துறையின் ஜாம்பவானாக இருக்கும் சுந்தர் பிச்சை இன்றைய நவீன வசதிகள் அனைத்தையும் தனது வீட்டினுள் கொண்டு வர முயற்சி செய்துள்ளார். இந்த வீட்டில் இன்பினிட்டி ஸ்விம்மிங் பூல், ஜிம், ஸ்பா, வைன் செல்லார், சோலார் பேனல், லிப்ட், பணியாளர்களுக்கான தங்குமிடம் என சகல வசதிகளும் உண்டு. மலை உச்சியில் இந்த வீடு அமைந்துள்ளதால் ஒட்டுமொத்த வீடும் நகரின் அழகை பார்க்கும் வகையில் இன்டீரியர் டிசைன் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக தான் 49 கோடி ரூபாயை சுந்தர் பிச்சை செலவு செய்துள்ளார்.

மேலும் ஆல்பபெட் அமெரிக்க பங்குச்சந்தையில் கூகுள் ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில் கூகுள் உயர் அதிகாரிகளின் 2022 ஆம் ஆண்டுக்கான சம்பளத்தை பட்டியலிட்டு உள்ளது. இதில் சுந்தர் பிச்சை-யின் பாதுகாப்புக்காக ஒரு வருடத்திற்கு செலவு செய்யும் தொகையையும் வெளியிட்டு உள்ளது. கூகுள் போன்ற மாபெரும் டெக் நிறுவனங்களின் தலைவர்களுக்கு பாதுகாப்புக்காகவே அதிகப்படியான தொகை செலவிடப்படும்.
இதன் படி 2022 ஆம் ஆண்டுக்கு சுந்தர் பிச்சையின் பாதுகாப்புக்கு மட்டுமே கூகுள் சுமார் 5 மில்லியன் டாலர் அளவிலான தொகையை செலவு செய்துள்ளது. இதையும் சேர்த்து தான் சுந்தர் பிச்சை 218 மில்லியன் டாலர் தொகையை 2022 ஆம் ஆண்டுக்கான சம்பளமாக பெற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications