இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் பணக்காரர்களுக்கான சேவைகள், வர்த்தகம், ஷாப்பிங் தளம் என பல இப்பிரிவு மக்களுக்காக வர துவங்கியுள்ளது. இந்த நிலையில் முக்கியமான ஆய்வறிக்கையை PRICE என்னும் அமைப்பு வெளியிட்டு வியப்படைய செய்துள்ளது.
2030-31 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் சூப்பர் ரிச் குடும்பங்களின் எண்ணிக்கை 5 மடங்கு உயர போகிறது என்றும், இதில் அதிகளவிலான வளர்ச்சி நாட்டின் கிராமம் மற்றும் ஊரக பகுதிகளில் இருந்து வர உள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது. இந்தியாவில் ஏழ்மை அதிகமாக இருக்கும் பகுதியாக கிராமம் மற்றும் ஊரக பகுதிகளை பார்க்கும் நிலையில் இப்புதிய ஆய்வு வியக்க வைக்கிறது.

இந்தியாவின் நுகர்வோர் பொருளாதாரம் மற்றும் இந்திய சுற்றுச்சூழல் பற்றிய மக்கள் ஆராய்ச்சி அல்லது PRICE செய்ய ஆய்வின் முடிவுகளை புதன்கிழமை வெளியானது, சூப்பர் ரிச் குடும்பம் என்றால் வருடத்திற்கு 2 கோடி ரூபாய் அளவிலான வருடாந்திர வருமானத்தை பெற்றும் குடும்பங்கள் தான்.
இந்த சூப்பர் குடும்பங்களின் எண்ணிக்கை 2021 உடன் முடிந்த 5 ஆண்டில் மட்டும் இந்தியாவில் 2 மடங்கு அதிகரித்து 18 லட்சமாக இருந்தது. இந்த எண்ணிக்கை அடித்த 10 வருடத்தில் அதாவது 2031 ஆம் ஆண்டில் 5 மடங்கு வளர்ச்சி அடைந்து 91 லட்சமாக உயரும் என தெரிவித்துள்ளது PRICE ஆய்வு முடிவுகள்.

இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் இந்த சூப்பர் குடும்பங்களின் வளர்ச்சி கிராமத்தில் 14.2 சதவீதமாகவும், நகரங்களில் 10.6 சதவீதமாக இருக்கும் என்பது தான். அதாவது நகரங்களை காட்டிலும் கிராமத்தில் சூப்பர் ரிச் குடும்பங்கள் எண்ணிக்கை வேகமாக உயரும் என தெரிகிறது.
இதனால் கிராமங்கள் மற்றும் ஊரக பகுதிகளில் அதிக வர்த்தகம் வளர்ச்சி வாய்ப்புகள் இருப்பது உறுதியாகியுள்ளது. மத்திய மாநில அரசுகள் தற்போது பெரு நகரங்களை தாண்டி சிறு நகரங்களில் அதிகப்படியான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வரும் காரணத்தால் பல வர்த்தக வாய்ப்புகள் உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications