பிரதமர் நரேந்திர மோடி வரும் டிசம்பரில் சூரத்தில் உலகின் மிகப்பெரிய வைர வர்த்தக மையமான சூரத் டைமண்ட் போர்ஸை திறந்து வைக்க உள்ளார்.
பொதுவாக தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களை வாங்கி குவிக்கும் நம்மவர்களின் பார்வை இப்போது வைரத்தின் மீதும் விழுந்துள்ளது. தற்போது வைர நகைகள் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. நம் நாட்டில் வைர தொழிலுக்கு பெயர் பெற்ற நகரம் குஜராத்தின் சூரத் நகரம். சூரத் வைரத்துக்கு பெயர் பெற்றது என்றாலும் அங்கு இதுவரை வைரத்துக்கான பெரிய வர்த்தக மையம் கிடையாது. ஆனால், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பாந்த்ரா-குர்லா வளாகத்தில் உலகின் மிகப்பெரிய வைர வர்த்தக மையமான பாரத் டைமண்ட் போர்ஸ் உள்ளது. இந்த வளாகத்தில் 2 லட்சம் சதுர அடியில் மொத்தம் 2,500 அலுவலகங்கள் உள்ளன. நாட்டின் முன்னணி வைர வர்த்தகர்கள் இந்த வர்த்தக மையத்தில் அலுவலகங்களை கொண்டுள்ளனர்.

இந்த சூழ்நிலையில், நாட்டின் முன்னணி வைர மையமாக மும்பைக்கு பதிலாக சூரத்தை மாற்றும் நோக்கில், உலகின் மிகப்பெரிய அலுவலக கட்டிடமாக சூரத் டைமண்ட் போர்ஸ் என்ற பிரமாண்டமான வைர வர்த்தக மையம் கட்டப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் எந்த ஆதரவும் இல்லாமல் சுமார் ரூ.3,400 கோடி செலவில் இந்த வைர வர்த்தக மையம் அமைக்கப்பட்டுள்ளது. 67 லட்சம் சதுர அடியில் 9 டவர்கள் கொண்ட 15 அடுக்குகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடமாக கட்டப்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவ தலைமையகமாக பென்டகனை காட்டிலும் இந்த வைர வர்த்தக மையம் பெரிது என்று கூறப்படுகிறது. இந்த வணிக வளாகத்தின் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. எதிர்வரும் டிசம்பரில், உலகின் மிகப்பெரிய வர்த்தக மையமான சூரத் டைமண்ட் போர்ஸை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்.
இதனால் மும்பையில் பாரத் டைமண்ட் போர்ஸ் வர்த்தக மையத்தில் உள்ள அலுவலகத்தை விரைவில் திறக்கப்பட உள்ள சூரத் வைர வர்த்தக மையத்துக்கு மாற்ற பல முன்னணி வைர வர்த்தகர்கள் திட்டமிட்டுள்ளனர். சூரத் வர்த்தக மையத்துக்கு மாறுவதற்காக மும்பையின் பாரத் டைமண்ட் போர்ஸ் வளாகத்தில் உள்ள அலுவலகங்களில் சுமார் ஆயிரம் மூடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் மும்பைக்கு வரி வருவாயில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று வர்த்தக ஒருவர் தெரிவித்தார். சூரத் டைமண்ட் போர்ஸ் வர்த்தக மையத்தின் நிர்வாக குழு உறுப்பினர் தினேஷ் பாய் நவடியா கூறுகையில், மும்பையில் சர்வதேச விமான நிலையம் இருப்பதால், தங்கள் தயாரிப்புகளின் ஏற்றுமதியை அதிகரிக்க மும்பையில் தங்கள் அலுவலகங்களை வர்த்தகர்கள் திறக்க வேண்டியிருந்தது. தற்போது சூரத் டைமண்ட் போர்ஸ் வர்த்தக மையத்தால், நாடு முழுவதும் உள்ள வைர வியாபாரிகள் ஒரே கூரையின் கீழ் வந்துள்ளனர். சூரத்தில் இருந்து சர்வதேச விமானங்களை தொடங்க மத்திய அரசு க்ரீன் சிக்னல் கொடுக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்.
கடந்த 30 ஆண்டுகளாக மும்பையில் தனது ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பிலான வர்த்தகத்தை நடத்தி வந்த நாட்டின் முன்னணி வைர வியாபாரியான வல்லபாய் லக்கானி ஏற்கனவே சூரத்துக்கு மாற்றியுள்ளதாக தகவல். சூரத்தில் கிட்டத்தட்ட 2,500 பணியாளர்களின் குடும்பங்கள் தங்குவதற்கு 1,200 அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியுள்ளார். அடுக்குமாடி குடியிருப்புகளில் அடிப்படை வீட்டு வசதிகளை செய்து கொடுத்துள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications