எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்க வாகன நிறுவனங்கள், அரசுகள் பெரிய அளவில் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. எலக்ட்ரிக் வாகனம் குறித்து விழிப்புணர்வும் மக்கள் மத்தியில் ஏற்பட்டு வருகிறது.
மும்பையை சேர்ந்த சுஷில் ரெட்டி என்ற இளைஞர், எலக்ட்ரிக் வாகனங்கள் குறித்து மக்களிடம் பெரிய நம்பிக்கை ஏற்படுத்தும் நோக்கில், எம்.ஜி. இசட் எஸ்.யூ.வி. எலக்ட்ரிக் காரில் தங்க நாற்கரை சாலை வழியாக மொத்தம் 8,849 கி.மீ. தூரம் பயணம் செய்து 13 மாநிலங்கள் 35 நகரங்களை கடந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இவருக்கு எலக்ட்ரிக் வாகனத்தில் பயணிக்க ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.3 செலவானது என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பையில் பிறந்து வளர்ந்தவர் சுஷில் ரெட்டி. இவர் பாம்பே ஐ.ஐ.டி.யில் எரிசக்தி அறிவியல் மற்றும் பொறியியலில் எம்.டெக் பட்டம் பெற்றவர். 2013-2016க்கு இடையில் அவர் ஒரு சோலார் எனர்ஜி துறையை சேர்ந்த நிறுவனத்தில் பணியாற்றினார்.
2016ல் கோடை காலத்தில், சூரிய ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களை பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், சுஷில் ரெட்டியும் அவரது நண்பர்களும் ஒரு பாதுகாப்பு வாகனத்துடன் சூரிய சக்தியில் இயங்கும் எலக்ட்ரிக் மிதிவண்டியை பயன்படுத்தி 79 நாட்களில் இந்தியா முழுவதும்7,424 கி.மீ. தூரம் பயணம் மேற்கொண்டனர்.
இ-சைக்கிளில் மேற்கொள்ளப்பட்ட நீண்ட பயணத்திற்காக அவருக்கு கின்னஸ் புத்தகத்தில் அங்கீகாரம் கிடைத்தது. 2017-18ல் எச்.இ.சி. பாரிஸ் வணிக பள்ளியில் sustainability and social innovation-ல் மாஸ்டர் டிகிரி பெற்றார்.
இந்நிலையில் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் பற்றிய பெரிய நம்பிக்கையை உருவாக்குவதற்கான உலகளாவிய செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக, 2022 செப்டம்பர் 30ம் தேதி முதல், மொத்தம் 8,849 கி.மீ. தூரத்தை 70 நாட்களில் தங்க நாற்கர சாலை வழியாக 13 மாநிலங்களில் உள்ள 35 நகரங்களுக்கு எலக்ட்ரிக் எஸ்.யூ.வி. காரில் பயணித்தார்.
தனது பயண அனுபவம் குறித்து சுஷில் ரெட்டி கூறியதாவது: நான் குருகிராமில் உள்ள எம்.ஜி. மோட்டார் குழுவை சந்தித்து, எலக்ட்ரிக் வாகனங்கள் மீது மக்களிடம் நம்பிக்கை உருவாக்குவதற்கும், அந்த வாகனங்கள் மீது மக்களிடம் ஈர்ப்பு உருவாக்குவதற்கும் பயணம் மேற்கொள்ளும் யோசனையை தெரிவித்தேன்.
அதற்கு அவர்களுக்கு பிடித்து போனது. இதனையடுத்து எனது 70 நாள் பயணத்துக்கு எலக்ட்ரிக் எம்.ஜி. இசட் எஸ்.யூ.வி. காரை அவர்கள் ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து 2022 செப்டம்பர் 30ம் தேதியன்று எனது பயணத்தை டெல்லியில் இருந்து தொடங்கினேன். என்னுடன் சில நண்பர்களும் வந்தனர்.
எனது முழு பயணத்தின்போது எம்.ஜி. இசட் எஸ்.யூ.வி. காருக்கு வழியில் உள்ள டி.சி. பாஸ்ட் சார்ஜ நிலையங்களில் 12 முறை மட்டுமே சார்ஜ் செய்தோம். இதற்கு ரூ.2,851 செலவானது. இதன்படி பார்த்தால், டி.சி. பாஸ்ட் சார்ஜிங்கிற்கு ஒரு கி.மீ.க்கு ரூ.3 செலவாகும். ஏனெனில் டி.சி. பாஸ்ட் சார்ஜரில் இன்று சராசரியாக ஒரு kWhக்கு ரூ.18 கட்டணம்.
அதேசமயம் வீடு உள்ளிட்ட பிற இடங்களில் எலக்ட்ரிக் காரை 16 ஆம்ப் சாக்கெட்டில் ஏ.சி. ஸ்லோ சார்ஜிங் செய்வதற்கு மாநிலத்தின் கட்டணத்தை பொறுத்து ஒரு கி.மீட்டருக்கு ரூ.2க்கும் குறைவாகவே செலவாகும். ஏ.சி. ஸ்லோ சார்ஜிங்கில் கார் முழு சார்ஜ் ஆக 20 மணி நேரத்துக்கு மேல் ஆகலாம்.
எஞ்சிய நேரத்தில், எந்த 16 ஆம்ப் சாக்கெட்டிலும் செருகக்கூடிய போர்ட்டபிள் ஏ.சி. சார்ஜிங் கேபிளை பயன்படுத்தி காரை இரவு முழுவதும் சார்ஜ் செய்தோம். நாங்கள் தங்கியிருந்து ஹோட்டல்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் எங்களுக்கு இலவசமாக சார்ஜ் செய்ய அனுமதித்து உதவினார்கள். ஒரு நாளில் அதிகபட்சம் 340 கி.மீ. பயணம் செய்தோம்.
பீகாரில் மின்வெட்டு இருந்ததால் அந்த மாநிலத்தில் பயணிக்கும் போது மட்டும் காரை சார்ஜ் செய்வதில் சவாலை சந்தித்தோம். பெட்ரோல் அல்லது டீசல் வாகனததை ஒரு கி.மீட்டர் இயக்குவதற்கு ரூ.7-10 வரை இருக்கும். ஆனால் எலக்ட்ரிக் வாகனத்தை இயக்குவதற்கு அதனை காட்டிலும் கிட்டத்தட்ட பாதிதான் செலவாகும்.
பயணத்தின் போது பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், ஐ.ஐ.டி.கள் போன்றவற்றுக்கு சென்றோம். அங்கு மாணவர்களிடம் எலக்ட்ரிக் வாகனங்கள் எப்படி செயல்படுகிறது, பலன்கள் குறித்து விளக்கினோம். எங்கள் காரை ஒட்டி பார்க்கவும் அனுமதித்தோம்.
இந்த பயணத்திற்கான நிதி மற்றும் ஆதரவு பெரிய நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற தனிநபர்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடம் இருந்து கிடைத்தது. அவர்களின் ஆதரவு இல்லாமல் இந்த பயணம் சாத்தியமில்லை என்று தெரிவித்தார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications