பங்குச் சந்தையில் தற்போது அதிகம் பேசப்படும் பங்குகளில் ஒன்றாக சுஸ்லான் எனர்ஜி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு நல்ல ஆதாயம் அளித்து வருவதே இதற்கு காரணம்.புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையை சேர்ந்த நிறுவனம் சுஸ்லான் எனர்ஜி. இந்நிறுவன பங்கின் விலை ஒரு காலத்தில் உச்சத்தை தொட்டு படு பாதாளத்தில் விழுந்தது. 2008ல் ரூ.459 என்ற உச்சத்தை தொட்ட பங்கு 2020ல் ரூ.1.58க்கு வீழ்ந்தது. இருப்பினும் குதிரை போல் வீழ்ந்த வேகத்தில் எழுந்து ஓட (உயர) தொடங்கி விட்டது. கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது.
சுஸ்லான் எனர்ஜி நிறுவனம் 2005ல் புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கியது. அப்போது இந்நிறுவன பங்குகள் வேண்டி வெளியீட்டு அளவை காட்டிலும் 15 மடங்கு விண்ணப்பங்கள் வந்தன. இதனையடுத்து சுஸ்லான் எனர்ஜியின் ஐபிஓ மாபெரும் வெற்றி பெற்றது. 2008 ஜனவரியில் இந்நிறுவன பங்கின் விலை இதுவரை இல்லாத அதிகபட்சமான ரூ.459ஐ எட்டியது. ஆனால் அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து சரிவு கண்டது. 2020 மார்ச் மாதத்தில் இந்நிறுவன பங்கின் விலை இதுவரை இல்லாத குறைந்தபட்சமான ரூ.1.59க்கு வீழ்ந்தது. ஆனால் அதன் பிறகு இந்நிறுவனத்தின் தலையெழுத்து மாறி விட்டது.

அந்த சரிவுக்கு பின், சுஸ்லான் எனர்ஜி நிறுவனத்தின் பங்கு விலை மீண்டும் உயர தொடங்கியது. கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கின் விலை 2,300 சதவீதம் உயர்ந்துள்ளது. 2024 செப்டம்பர் 12ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் சுஸ்லான் எனர்ஜி பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.89.04ஐ எட்டியது. கடந்த சில ஆண்டுகளாக இந்நிறுவன பங்கு வழங்கி வரும் ஆதாயத்தின் காரணமாக, முதலீட்டாளர்களின் விருப்பங்களில் ஒன்றாக மாறியுள்ளது.கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் சுஸ்லான் எனர்ஜி நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.82 சதவீதம் உயர்ந்து ரூ.55.30ஆக இருந்தது.
முன்னணி தரகு நிறுவனமான இன்வெஸ்டெக், சுஸ்லான் எனர்ஜி நிறுவனத்துக்கு வாங்கலாம் என்ற மதிப்பீட்டை வழங்கியுள்ளது. மேலும் இப்பங்கிற்கான இலக்கு விலையை ரூ.70ஆக நிர்ணயம் செய்துள்ளது. பெரிய பொருளாதார நிலைமைகள் காற்றாலை எரிசக்தி ஆற்றலை வளர்ச்சியை ஆதரிப்பதாகவும், சுஸ்லான் எனர்ஜி ஆர்டர் புக் 5.5 ஜிகா வாட்டாக உயரும் என்றும் இன்வெஸ்டெக் நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும், 2027 மார்ச் வரையிலான நிதியாண்டுகளில் இந்நிறுவனத்தின் வருவாய் மற்றும் நிகர லாபம் வளர்ச்சி முறையே 55 சதவீதம் மற்றும் 66 சதவீதமாக இருக்கும் என்றும் இன்வெஸ்டெக் கணித்துள்ளது.
Story written by: Subramanian
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications