லட்சக்கணக்கில் முதலீடு செய்தால் மட்டும்தான் தொழிலில் வெற்றி பெற முடியும் என்பதில்லை. குறைந்த முதலீட்டில் தொடங்கப்பட்ட பல நிறுவனங்கள் இன்று பெரிய நிறுவனங்களாக வளர்ந்துள்ளன. அதற்கு உதாரணமாக பிரபல திண்பண்டங்கள் (snacks) தயாரிப்பு நிறுவனமான ஸ்வீட் காரம் காபி நிறுவனத்தை கூறலாம்.
வெறும் ரூ.2,000 முதலீட்டில் தொடங்கப்பட்ட ஸ்வீட் காரம் காபி நிறுவனம் இன்று 10 லட்சம் டாலர் உலக ஸ்நாக்ஸ் நிறுவனமாக உருவெடுத்துள்ளது. ஸ்வீட் காரம் காபி நிறுவனம் உருவான கதையை பார்ப்போம்.

சென்னையை சேர்ந்த தம்பதியினர் ஆனந்த் பரத்வாஜ்-நளினி பார்த்திபன். இவர்கள் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வந்தனர். ஒரு நாள் நல்ல முறுமுறுப்பான, அசல் முறுக்குகளை சாப்பிட விரும்பினர். அதற்கான தேடலில் இறங்கியபோது அவர்களுக்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சியது.
அதேசமயம், சந்தையில் தனித்துவமான, வீட்டு சுவையில் தயாரிக்கப்பட்ட திண்பண்டங்கள் இல்லாததை அவர்கள் கவனித்தனர். இதனையடுத்து நாமே ஏன் வீட்டு சுவையில் திண்பண்டங்களை தயார் செய்து விற்பனை செய்யக் கூடாது என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டது.
இதனையடுத்து, ஆனந்த் பரத்வாஜ்-நளினி பார்த்திபன் தம்பதியனர், அவர்களது உறவினர்கள் ஸ்ரீவத்சன் சுந்தரராமன் மற்றும் வீர ராகவன் ஆகியோருடன் இணைந்து ஸ்வீட் காரம் காபி நிறுவனத்தை தொடங்க முடிவு செய்தனர்.
2015ல் தீபாவளிக்கு சிறிது நாட்களுக்கு முன்பு ரூ.2,000 முதலீட்டில் ஒரு சாதாரண வீட்டு சமையலறையில் ஸ்வீட் காரம் காபி நிறுவனத்தை தொடங்கினர். நிறுவனத்தின் தொடக்க காலத்தில் நளினி குடும்பத்தில் உள்ள பெண்கள்தான் இனிப்புகள் மற்றும் திண்பண்டங்களை தயாரித்தனர். பின்னர் திண்பண்டங்களை தயாரிப்பதில் சிறந்து விளங்கும் பெண்களையும் சேர்த்து கொண்டனர்.
ஆரம்பத்தில் முறுக்கு, மெட்ராஸ் மிக்சர், அதிரசம், இனிப்பு முறுக்கு உள்ளிட்ட 10 வகையான தென்னிந்திய திண்பண்டங்களை வழங்கினர். ஆர்டர்கள் எடுப்பது முதல் மார்க்கெட்டிங் மற்றும் டெலிவரி வரை அனைத்தையும் நான்கு பேர் கொண்ட சிறிய குழு செய்தது.
ஸ்வீட் காரம் காபி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் அவர்களது வர்த்தகம் அசுர வளர்ச்சி கண்டது. இதனையடுத்து 2021ல் நளினி பார்த்திபன் வேலையை ராஜினாமா செய்து விட்டு முழு நேர தொழில்முனைவோராக மாறினார். 2023ல் ஆனந்த் பரத்வாஜ் தனது வேலையை ராஜினாமா செய்து முழு நேர தொழில்முனைவோராக களம் இறங்கினார்.
2022ல் உலகம் முழுவதும் தங்களது தயாரிப்புகளை விற்பனை செய்யும் நோக்கில் வெப்சைட் தொடங்கினர். அதில் 60 வகையான திண்பண்டங்களை வழங்கினர். அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் யு.கே. போன்ற நாடுகளுக்கு தங்களது தயாரிப்புகளை அனுப்புகின்றனர்.
2015ல் ரூ.2,000 முதலீட்டில் தொடங்கிய ஸ்வீட் காரம் காபி நிறுவனம் 2022க்குள் மில்லியன் டாலர் நிறுவனமாக உருவாகியுள்ளது. ஸ்வீட் காரம் காபி நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான நளினி பார்த்திபன் கூறுகையில், ஆரம்பத்தில் தீபாவளி போன்ற பண்டிகை காலத்தில் எங்களது வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சில மாதங்களில் வர்த்தகம் சுமாராக இருந்தது.
இருப்பினும் மாதத்துக்கு சராசரியாக 30 ஆர்டர்கள் வரை பெற்று மெதுவாக வளர்ந்தோம். முதலில் திருவல்லிக்கேணி பகுதியில் மட்டுமே திண்பண்டங்களை டெலிவரி செய்தோம். சுவிக்கி போன்ற பெரிய டெலிவரி சேவைகள் எங்களிடம் இல்லை.
ஆகையால் நானும் எனது கணவரும் மட்டுமே பெரும்பாலான டெலிவரிகளை செய்தோம் என்று தெரிவித்தார். கடந்த 2 ஆண்டுகளில் ஸ்வீட் காரம் காபி நிறுவனம் உலகம் முழுவதுமாக 3 லட்சத்துக்கும் அதிகமான ஆர்டர்களை செய்துள்ளது. மேலும் தங்களது இணையதளம் மற்றும் ஆப் வாயிலாக 1 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருகிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?



Click it and Unblock the Notifications