பொதுவாக நமக்கு பிடித்த பாடல்களை நாம் பிளே லிஸ்டுகள் என்ற வடிவில் நமது நண்பர்களிடமும் நமக்கு பிடித்தவர்கள் இடமும் அல்லது நமது சமூக வலைதள பக்கங்களிலும் கூட பகிர்ந்து கொள்கிறோம். இனி நமக்கு பிடித்த உணவுகளின் பட்டியலையும் இப்படி பகிர்ந்து கொள்ளலாம்.
அதற்கான வசதியை தான் ஸ்விக்கி அறிமுகம் செய்துள்ளது.
ஸ்விக்கி உணவு டெலிவரி செயலி, "ஈட்லிஸ்ட்ஸ்" (Eatlists) என்ற ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. உலகிலேயே முதன்முறையாக இந்த அம்சத்தை அறிமுகம் செய்திருப்பதாக ஸ்விக்கி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி பயனாளர்கள் தங்களுக்கு விருப்பமான உணவுகளின் பட்டியலை இதில் உருவாக்கி வைத்துக் கொள்ள முடியும். அதாவது பயனாளர்கள் தங்களுக்கு பிடித்த உணவினை புக் மார்க் செய்து அவற்றை ஈட்லிஸ்ட்ஸ் என்ற பெயரின் கீழ் சேமித்துக் கொள்ளலாம். தங்களுக்கு பிடித்த இந்த உணவுகளின் பட்டியலை தங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் பகிர்ந்து கொள்ளலாம்.
மற்றவர்கள் தங்களிடம் பகிர்ந்து கொண்ட உணவு பட்டியலையும் இவர்கள் தேடி தெரிந்து கொள்ளலாம் என ஸ்விக்கி நிறுவனம் அறிவித்துள்ளது. இவ்வாறு தங்களுக்கு பிடித்தமான உணவுகளின் பட்டியலை பயனாளர்கள் சேமித்து வைப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கான உணவினை ஆர்டர் செய்ய வரும்போது இந்த லிஸ்டினை பயன்படுத்தி எளிதாக ஆர்டர் செய்து கொள்ளலாம் என்றும் இதனால் அவர்களது நேரம் மிச்சமாகும் என்றும் ஸ்விக்கி கூறுகிறது.
ஸ்விக்கி செயலி நடத்திய ஆய்வில் 58 சதவீத பயனாளர்கள் தங்களுக்கான உணவினை தேர்வு செய்யும்போது மற்றவர்களின் உதவியை நாடுவது தெரியவருகிறதாம், குறிப்பாக 68% பேர் தங்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் பரிந்து பரிந்துரைகளை கேட்டு தான் உணவினை ஆர்டர் செய்கிறார்களாம்.
ஸ்விக்கின் இந்த புதிய அம்சம் மூலம் உங்களின் விருப்பமான உணவு பட்டியலை இந்த உலகத்துடன் நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம் அதேபோல மற்றவர்களின் விருப்பமான உணவுகளின் பட்டியலில் இருந்தும் சிலவற்றை நீங்கள் தேர்ந்தெடுத்து புதிதாக ருசித்துப் பார்க்க முடியும் என ஸ்விக்கி நிறுவனத்தின் ஃபுட் மார்க்கெட் பிளேஸ் தலைமை செயல் அதிகாரியான ரோஹித் கபூர் தெரிவித்துள்ளார்.
வாடிக்கையாளர்கள் தங்களது ஸ்விக்கி செயலியை ஓபன் செய்து அதில் தங்களுக்கான உணவினை ஆர்டர் செய்யலாம். அப்பொழுது அவர்களுக்கு save to eatlists என்ற ஒரு option காண்பிக்கும். அதனை கிளிக் செய்து தங்களுக்கு பிடித்த உணவுகளை புதிய பெயரில் பட்டியலிடலாம் அல்லது ஏற்கனவே"All time fav", "Comfort Food", "Late night cravings" மூன்று பிரிவுகள் வழங்கப்பட்டுள்ளன அதில் ஒன்றின் கீழ் சேமித்துக் கொள்ளலாம் என ஸ்விக்கி தெரிவித்துள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications