2025 ஆம் ஆண்டின் கடைசி இரவு நேற்று மிகுந்த உற்சாகத்துடன் மக்கள் கொண்டாடினர். புத்தாண்டு கொண்டாட்டம் என்றாலே உணவு மிகவும் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், நாட்டின் பெரும்பாலான மக்கள் அதிகளவில் ஆர்டர் செய்துள்ளனர்.
காலை முதல் டெலிவரி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் ஹோம் டெலிவரி சேவைகள் கடுமையாக பாதிக்கும் என எதிர்பார்த்த நிலையில், மாலையில் ஸ்விக்கி மற்றும் சோமேட்டோ டெலிவரி ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்க தொகையை அறிவித்தது மூலம் பெரும்பாலான ஆர்டர்கள் தாமதம் இல்லாமல் குறித்த நேரத்திற்குள் மக்கள் பெற்றனர்.

இதேவேளையில் பண்டிகை காலத்தில் ஆன்லைன் ஆர்டர் அதிகமாக வருவது ஒரு வழக்கமான விஷயமாக மாறிவிட்ட நிலையில் அனைத்து ஆன்லைன் சேவை நிறுவனங்களும் இதற்கு முன்கூட்டியே தயாராகி வருகிறது. தொழில்நுட்பத்தில் துவங்கி, ஆப்ரேஷன்ஸ், சப்ளை செயின் வரையில் அனைத்தையும் மேம்படுத்தி தயாராக இருந்தது. இதன் விளைவு வாடிக்கையாளருக்கு உடனடி சேவை, நிறுவனத்திற்கு அதிகப்படியான வர்த்தகம்.
இந்த நிலையில் ஸ்விக்கி நிறுவனம் நேற்று மாலை முதல் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் (Swiggy Food) புத்தாண்டு ஆர்டர்கள் குறித்து தொடர்ந்து பதிவுகளை செய்து வந்தது. இதில் சில முக்கியமான பதிவுகள் மக்கள் எந்த பொருட்களை அதிகம் ஆர்டர் செய்துள்ளனர் என தெரிய வந்துள்ளது.
பிரியாணி தான் ராஜா
ஸ்விக்கியின் அதிகாரப்பூர்வ X கணக்கில் வெளியிடப்பட்ட பதிவில், பிரியாணியை உணவுகளின் அரசனாக அறிவித்தது. மாலை 7:30 மணிக்கு முன்பே 2,18,993 பிரியாணி ஆர்டர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பது போல இந்த புத்தாண்டிலும் பிரியாணி தான் ராஜா, ஆனால் மக்கள் இந்த வருடத்தில் சில மாற்றத்தை ஏற்படுத்தியது தெரிய வந்துள்ளது.
பர்கர்
பிரியாணிக்கு அடுத்தபடியாக, பர்கர்கள் 90,000க்கு மேல் ஆர்டர்களை பெற்றுள்ளன. இரவு 9 மணிக்கு முன்பே இந்த எண்ணிக்கை எட்டியது.
மக்கள் மத்தியில் மாற்றம்
பெங்களூரு மக்கள் அதிகளவில் ஆரோக்கியத்திற்கு முக்கியதுவம் கொடுத்து வருவது புத்தாண்டு ஆர்டர்கள் மூலம் தெரிய வந்துள்ளதாக ஸ்விக்கி தனது பதிவில் தெரிவித்துள்ளது. பெங்களூர் மக்கள் அதிகளவில் நேற்று மாலை முதல் சாலெட் அதிகம் ஆர்டர் செய்துள்ளனர். ஏறத்தாழ 2,000 சாலட் ஆர்டர்கள் பதிவாகியுள்ளன, இது ஸ்விக்கி நிர்வாகத்திற்கே ஆச்சரியமளித்திருக்கலாம்.
கிச்சடி போன்ற comfort உணவுகளை 9,000க்கு மேல் ஆர்டர்களை பெற்றுள்ளன.
ஸ்வீட் எடு கொண்டாடு
இனிப்புகளைப் பொறுத்தவரை, கஜர் கா ஹல்வா 8,000 ஆர்டர்கள் செய்யப்பட்டு உள்ளது.
இதை தொடர்ந்து 29618 பேர் டீ ஆர்டர் செய்துள்ளனர், 46,627 பேர் குலோப்ஜாமூன் ஆர்டர் செய்துள்ளனர், கோரக்பூர் மக்கள் அதிகளவில் பீட்சா ஆர்டர் செய்துள்ளனர் என ஸ்விக்கி புட் டிவிட்டர் கணக்கில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஸ்விக்கி தளம் 2025 ஆண்டு முழுவதும் கிட்டத்தட்ட 7 கோடி மக்கள் உணவுகளை ஆர்டர் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது இந்தியாவில் உணவு டெலிவரி சேவைகளின் வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications