உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி மூலம் பல்வேறு உணவகங்கள் உணவை வழங்கி வருகின்றன. ஆனால் சில நேரங்களில் எதிர்பார்த்தபடி விற்பனை இருக்காது. அப்படி இருக்கையில் ஏராளமான உணவுப் பொருட்கள் வீணாகும் வாய்ப்புள்ளது. இதை தடுப்பதற்காக ஸ்விக்கி நிறுவனம் ஒரு புதிய முயற்சியை தொடங்கியுள்ளது. "Swiggy Serves" என்ற புதிய முயற்சியின் மூலம் தனது உணவக பார்ட்னர்களிடம் இருக்கும் மிஞ்சிய உணவை சேகரித்து தேவையானவர்களுக்கு நிறுவனம் வழங்கவுள்ளது. இதன் மூலம் 2030-ஆம் ஆண்டுக்குள் 50 மில்லியன் உணவுகளை விநியோகிக்கும் இலக்கைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்த முயற்சிக்காக ஸ்விக்கி நிறுவனம், தொண்டு நிறுவனமான ராபின் ஹுட் ஆர்மியுடன் இணைந்துள்ளது. ராபின் ஹுட் ஆர்மி என்பது ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாகும். இதில் ஆயிரக்கணக்கான இளம் தொழில் முனைவோர்கள், ஓய்வு பெற்றோர், இல்லத்தரசிகள், கல்லூரி மாணவர்கள் இணைந்துள்ளனர்.

இந்தப் புதிய முயற்சி குறித்து தகவல் அளித்த ஸ்விக்கி உணவு சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரி ரோஹித் கபூர், "தற்போது ஸ்விக்கி சர்வ்ஸ் திட்டம் 33 நகரங்களில் இயங்கி வருகிறது. இந்த முயற்சியை மேலும் பல நகரங்களுக்கு கொண்டு செல்ல நாங்கள் திட்டமிட்டுள்ளோம். எந்த உணவும் வீணாகக்கூடாது என்பதே இதன் நோக்கம்" என்றார்.
ஸ்விக்கி சர்வ்ஸ் திட்டம் டிசம்பர் 2024 முதல் வாரத்தில் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் தற்போது 33 நகரங்களில் செயல்பட்டு வருகிறது மற்றும் 160-க்கும் மேற்பட்ட உணவகங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த முயற்சியின் கீழ், கிட்டத்தட்ட 2,000 உணவுப் பொருட்கள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகளின் கூற்றுப்படி, இந்தியாவில் சுமார் 19.5 கோடி ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் உள்ளதாகவும், இது உலகில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடு உள்ள மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்கு என்றும் கூறியுள்ளது. மேலும் 2024-ஆம் ஆண்டில் பசி பிரச்சனையை கொண்ட 127 நாடுகளின் பட்டியலில் இந்தியா 105-வது இடத்தில் உள்ளது. இந்தியா ஒவ்வொரு ஆண்டும் ஒரு நபரின் அடிப்படையில் 55 கிலோ உணவை வீணாக்குகிறது என்றும் தெரிவித்துள்ளது.
இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் ஸ்விக்கி சர்வ்ஸ் முயற்சியை நிறுவனம் கொண்டு வந்துள்ளது. பைக்கேன் பிரியாணி, பிரியாணி பை தி கிலோ, டானா சோகா, வர்தாஸ், சார்கோல் ஈட்ஸ் - பிரியாணி & பியாண்ட், டப்பா கரம், ஹவுஸ் ஆஃப் பிரியாணி, பி.டெக் மோமோஸ் வாலா, சமோசா சிங், பாபாய் டிஃபின்ஸ், தோசை அண்ணா, அர்பன் தந்தூர் போன்ற பிராண்டுகள் ஸ்விக்கி சர்வ்ஸ் முயற்சியின் ஒரு பகுதியாக சேர கையெழுத்திட்டுள்ளன.
உணவு வீணாவதைத் தடுப்பதற்காக ஸ்விக்கி நிறுவனம் கையில் எடுத்துள்ள இந்த முயற்சி பலரின் பாராட்டை பெற்றுள்ளது. குப்பையில் கொட்டுவதற்கு பதிலாக யாரோ ஒருவரின் பசியை போக்கும், இந்த திட்டத்தில் பல ஹோட்டல் நிறுவனங்களும் ஆர்வத்துடன் இணைந்து வருகின்றன.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications