இந்தியாவில் ஆன்லைன் புட் ஆர்டர் மற்றும் டெலிவரி என்பது மக்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறியுள்ளது, இத்துறையில் இருக்கும் நிறுவனங்கள் தொடர்ந்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தாலும், இன்னும் மலிவான விலையில் சேவை அளிக்கும் முறையை கண்டுபிடிக்க முடியாமல் மாட்டிக்கொண்டு உள்ளது.
இதேபோல் உணவு டெலிவரி நிறுவனங்கள் தங்களது முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான லாபத்தையும், வருமானத்தையும் காட்ட வேண்டும் என்ற முக்கிய இலக்கு இருக்கும் காரணத்தால் அவ்வப்போது கட்டணத்தை உயர்த்தி வருகிறது. கடந்த ஒரு வருடத்தில் பல முறை பல கட்டணத்தை உயர்த்தியிருக்கும் காரணத்தால் மக்கள் புலம்ப துவங்கியுள்ளனர்.

உணவு டெலிவரி நிறுவனங்கள் Swiggy மற்றும் Zomato ஆகியவை மீண்டும் தங்கள் பிளாட்பார்ம் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. இதன் காரணமாக, இனி இந்த இரண்டு நிறுவன வாடிக்கையாளர்களும் ஒவ்வொரு ஆர்டருக்கும் ரூ.6 செலுத்த வேண்டும். இது முந்தைய கட்டணமான 5 ரூபாயை ஒப்பிடுகையில் 20 சதவீதம் அதிகமாகும்.
பிளாட்பார்ம் கட்டணம் என்றால் என்ன?: பொதுவாக நாம் உணவை ஸ்விக்கி, சோமேட்டோ தளத்தில் ஆர்டர் செய்யும் போது டெலிவரி கட்டணம், ஜிஎஸ்டி, உணவகக் கட்டணம், கையாளுதல் கட்டணம் என பல கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இந்த பிளாட்பார்ம் கட்டணம் இவை அனைத்திற்கும் வேறுபடுகிறது.
இந்த பிளாட்பார்ம் கட்டணம் தற்போது பெங்களூரு மற்றும் டெல்லியில் மட்டுமே நடைமுறையில் உள்ளது. வாடிக்கையாளர் இந்த நிறுவனங்களில் மெம்பர்ஷிப் வைத்திருந்தாலும் கூட, அனைத்து உணவு ஆர்டர்களுக்கும் இந்தக் கட்டணம் வசூலிக்கப்படும்.
பொதுவாக பிளாட்பார்ம் கட்டணம் என்பது ஒரு 3ஆம் தரப்பு நிறுவனத்திடம் இருந்து சேவை பெறும் போது, வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களை இணைத்ததற்காக இத்தளம் வசூலிக்கும் கட்டணம். இந்தக் கட்டணம் நிறுவனத்திற்கு நேரடியாகச் செல்லும், இது செலவுகளைக் கட்டுப்படுத்தவும் வருவாயை அதிகரிக்கவும் உதவும்.
இந்த பிளாட்பார்ம் கட்டணம் என்பது படிப்படியாக நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆர்டருக்கும் ரூ.1 அதிகரிப்பு வாடிக்கையாளர்களுக்கு பெரிதாகத் தோன்றாவிட்டாலும், Zomato ஒரு நாளைக்கு சுமார் 22-25 லட்சம் ஆர்டர்களை டெலிவரி செய்கிறது. இதன் மூலம், ஒவ்வொரு நாளும் கூடுதலாக ரூ.25 லட்சம் வருமானத்தை எளிதாக பெற முடியும். மொத்தத்தில், உணவு டெலிவரி நிறுவனங்கள் அனைத்தும் இக்கட்டணத்தை வசூலிப்பதன் மூலம் ஒரு நாளுக்கு ரூ.1.25 முதல் ரூ.1.5 கோடி வரை கூடுதல் வருவாயை பெற முடியும்.
இத்தகைய பிளாட்பார்ம் கட்டணத்தை முதல் முறையாக Swiggy ஏப்ரல் 2023 இல் 2 ரூபாயாக அறிமுகப்படுத்தியது. இதைத் தொடர்ந்து அதே வருடம் ஆகஸ்ட் மாதம் Zomato அறிமுகம் செய்தது. அதிலிருந்து, இரு நிறுவனங்களும் மாறி மாறி கட்டணத்தை உயர்த்தி வருகின்றன.
1 ரூபாய் பெரிய தாக்கத்தை வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏற்படாத காரணத்தால், ஆர்டர் அளவில் எதிர்மறையான பாதிப்புகள் இல்லாததை கருத்தில் கொண்டு நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தி வருகின்றன.
பிக் டைம்-ல் Zomato ஒரு ஆர்டருக்கு ரூ.9 வரை கட்டணமாக வசூலித்தது, இது வாடிக்கையாளர் முனையில் இருந்து பார்க்கும் போதும் பெரும் துயரமாக இருக்கிறது. Swiggy பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத் மற்றும் பிற நகரங்களில் சில வாடிக்கையாளர்களுக்கு ரூ.10 கட்டணத்தை சோதனை செய்து பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications