தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் மே நான்காம் தேதி ஆன நாளை எண்ணப்படுகின்றன. இந்தியாவே இந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகளை மிகவும் தீவிரமாக உற்று நோக்குகிறது.
மத்திய அரசுக்கு தீவிரமான எதிர்ப்பு நிலைப்பாட்டை கொண்ட தமிழ்நாடு, கேரளா ,மேற்குவங்கம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் தேர்தல் நடத்தப்பட்டு அந்த முடிவுகள் வெளிவருகின்றன என்பதால் நாடு முழுவதுமே கவனிக்கப்படக்கூடிய ஒரு விஷயமாக இந்த தேர்தல் முடிவுகள் மாறி இருக்கின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை வாக்கு எண்ணிக்கை எப்போது தொடங்குகிறது, எத்தனை மணிக்கெல்லாம் யார் பெரும்பான்மை பெறுகிறார்கள் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பது தெரிந்துவிடும் என்பது குறித்து தற்போது நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு சட்டசபையில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் நாளைய தினம் எண்ணப்படுகின்றன. ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி , எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜய்யின் தமிழக வெற்றி கழகம் என நான்கு முனை போட்டி நிலவுகிறது. தேர்தலில் மொத்தம் 85 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.
இந்த தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேரடியாக இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். அதுமட்டுமில்லாமல் அனைத்து தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். பாரம்பரியமாக தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வரக்கூடிய திமுக ,அதிமுக இரண்டிற்கும் ஒரு சவாலாக தமிழக வெற்றி கழகம் உருவெடுக்குமா என்பதுதான் இந்த தேர்தல் முடிவுகள் சொல்ல போகும் செய்தியாக இருக்கும்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் மே நான்காம் தேதி அதாவது நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் அளித்த தபால் வாக்குகள் எண்ணப்படும். அந்த முடிவுகளை அதிகாரிகள் வெளியிடுவார்கள். அதன் பிறகு தான் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகி இருக்கக்கூடிய வாக்குகளை எண்ணும் பணி என்பது நடைபெறும்.
தமிழ்நாடு தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் செயலியிலும் செய்தி சேனல்கள் மற்றும் குட் ரிட்டர்ன்ஸ் நேரலையிலும் தெரிந்து கொள்ளலாம். நண்பகல் 12 மணி அளவில் யாருக்கு பெரும்பான்மை கிடைக்கிறது என்பது தெரிவதற்கு வாய்ப்பு உள்ளது. ஒருவேளை பெரும்பாலான மக்கள் திமுகவிற்கே தங்களுடைய வாக்குகளை பதிவு செய்திருக்கிறார்கள் எனும் போது நண்பகலிலேயே யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பது தெரிந்த விடும்.
ஆனால் பல்வேறு தொகுதிகளிலும் மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் வேட்பாளர்களுக்கு இடையிலான வெற்றி வாய்ப்புக்கான வாக்குகள் வித்தியாசம் இருக்கிறது எனும் போது முடிவுகள் தெளிவாக கிடைப்பதற்கு நாளை மாலை கூட ஆகலாம். ஏனெனில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் கூட வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படுகிறது. இந்த தேர்தலில் விஜயின் தமிழக வெற்றி கழகம் யாருடைய வாக்குகளை பிரித்தது என்ற என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை என்பதால் பல்வேறு தொகுதிகளிலும் போட்டி கடுமையாக இருக்கும்.
குறிப்பாக வெற்றியை தேடி தரக்கூடிய வாக்குகள் வித்தியாசம் மிக சொற்ப அளவில்தான் இருக்கும் என்றே கணிக்கப்படுகிறது என்பதால் நாளை மாலையில் முழுமையான தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. வாக்கு எண்ணும் மையங்களில் ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுகிறது என்பன உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது என்றால் சில இடங்களில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்படலாம் அல்லது மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்படலாம். அது எதுவும் இல்லை சுமூகமாக வாக்கு எண்ணிக்கை நடக்கிறது என்றால் நாளை 3 மணி அளவில் பெரும்பான்மையான முடிவுகள் தெரிய வரும்.
ஒரு வேளை எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை என்றால் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளது. எதுவாக இருந்தாலும் நாளைய தினம் மாலையில் தெரிந்துவிடும்.


Click it and Unblock the Notifications

