ஸ்டாலின் Vs ஈபிஎஸ் Vs விஜய் Vs சீமான்: பெண்களுக்காக இவர்கள் முன் வைக்கும் வாக்குறுதிகள் என்னென்ன?

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் திமுக தீவிரமாக இருக்கிறது, இழந்த ஆட்சியை மீட்டு விட வேண்டும் என்பதில் அதிமுக தீவிரமாக இருக்கிறது. மற்றொருபுறம் பல ஆண்டுகளாக தேர்தல் களத்தில் இருந்து ஒரு கணிசமான இடத்தில் வெற்றி பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சி களம் காண்கிறது. முதன்முறையாக விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறது.

இப்படி நான்குமுனைப் போட்டி நிலவுவதால் மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள், யாரை தேர்ந்தெடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் வருகிறது. அந்த வகையில் வாக்காளர்களை கவர்வதற்காக அரசியல் கட்சிகள் தரப்பில் பல்வேறு இலவச அறிவிப்புகள் வெளியே வந்துள்ளன. குறிப்பாக பெண் வாக்காளர்களை குறி வைத்து தான் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளையே தயாரித்துள்ளன. அந்த வகையில் எந்தெந்த கட்சி பெண்களை கவர என்னென்ன வாக்குறுதி தந்திருக்கிறது என்பதை தற்போது தெரிந்து கொள்ளலாம்.

ஸ்டாலின் Vs ஈபிஎஸ் Vs விஜய் Vs சீமான்: பெண்களுக்காக இவர்கள் முன் வைக்கும் வாக்குறுதிகள் என்னென்ன?

உரிமை தொகை: திமுகவை பொருத்தவரை தற்போது மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது அதனை 2000 ரூபாயாக உயர்த்துவோம் என அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. அடுத்ததாக பெண்கள் சுய உதவி குழுக்களுக்கு வட்டி இல்லாமல் ஐந்து லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என திமுக அறிவித்துள்ளது.

அதிமுகவை பொறுத்தவரை குலவிளக்கு என்ற திட்டத்தை தொடங்கி பெண்களுக்கு மாதம் 2000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் எனக் கூறியிருக்கிறது. அதேபோல பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாயும் தீபாவளி பண்டிகையின் போது இலவசமாக புடவையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பெண்கள் சுய தொழில் தொடங்க 10,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்திருக்கிறது.

ஸ்டாலின் Vs ஈபிஎஸ் Vs விஜய் Vs சீமான்: பெண்களுக்காக இவர்கள் முன் வைக்கும் வாக்குறுதிகள் என்னென்ன?

விஜய்-இன் தமிழக வெற்றி கழகத்தை பொருத்தவரை பெண்களுக்கு மாதம் 2500 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும், திருமணமாகும் பெண்களுக்கு தங்கம் மற்றும் பட்டுப்புடவை சீராக வழங்கப்படும் , பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் , பெண்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறது.

நேரடி நிதி உதவி: திமுக ஆட்சி அமைத்தால் குடும்பங்களுக்கு 8000 ரூபாய் மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த கூப்பனை கொண்டு தங்கள் வீட்டிற்கு தேவையான வாஷிங் மெஷின், பிரிட்ஜ், ஏசி உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்று அவர்கள் வாங்கிக் கொள்ளலாம்.

அதேபோல அஇஅதிமுகவை பொறுத்தவரை தாங்கள் ஆட்சிக்கு வந்த உடனே அனைத்து குடும்பங்களுக்கும் 10,000 ரூபாய் ஒருமுறை நிதி உதவியாக வழங்கப்படும் என்றும் இலவசமாக பிரிட்ஜ் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது. விஜயின் தவெக புதிதாக பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறது.

Also Read

சிலிண்டர்: தற்போது எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வும் எல்பிஜி தட்டுப்பாடு குறித்தும் தான் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதுவும் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது. திமுகவை பொறுத்தவரை எல்பிஜி சிலிண்டர் விவகாரத்தில் எந்த ஒரு வாக்குறுதியும் தரவில்லை. ஆனால் அதிமுக ஆண்டுக்கு மூன்று இலவச எல்பிஜி சிலிண்டர் வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறது தமிழக வெற்றிக் கழகத்தை பொருத்தவரை ஆறு இலவச எல்பிஜி சிலிண்டர் வழங்கப்படும் எனக் கூறியிருக்கிறது.

Recommended For You

இலவச பேருந்து: தற்போது பெண்கள் கட்டணமில்லாமல் உள்ளூர் அரசு பேருந்துகளை பயன்படுத்துகின்றனர். அது அப்படியே தொடரும் என திமுக அறிவித்து இருக்கிறது. அதிமுகவை பொறுத்தவரை பெண்கள் மட்டும் இல்லாமல் ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் என தெரிவித்திருக்கிறது. அதேபோல இருசக்கர வாகனம் வாங்கக்கூடிய ஐந்து லட்சம் பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறது. தவெக அனைத்து அரசு பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம் என்ற வாக்குறுதி தந்திருக்கிறது.

சீமானின் நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை பொருட்களை இலவசமாக தருவதை தவிர்த்து அரசு சேவைகளை இலவசமாகவும் தரமாகவும் வழங்குவதை நோக்கமாக கொண்டு தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு இருக்கின்றனர். அந்த வகையில் அரசு பள்ளிகளுக்கு இணையாக தனியார் பள்ளிகள் மாற்றப்படும் எல்கேஜி முதல் ஆராய்ச்சி படிப்பவரை அனைத்து மாணவர்களுக்கும் கல்வி முற்றிலுமாக இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறது. அதேபோல அரசு மருத்துவமனைகள் நவீனப்படுத்தப்பட்டு ஏழை பணக்காரர் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் உயர்தர சிகிச்சை மற்றும் மருந்து பொருட்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் சுத்திகரிக்கப்பட்ட தரமான குடிநீர் வீடுகளுக்கே தடையின்றி இலவசமாக வழங்கப்படும் என கூறப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பான சமூகம், 50% இட ஒதுக்கீடு என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை தந்திருக்கிறது. எனவே இந்த இலவசங்களில் எந்த இலவசத்தை பெண்கள் தேர்வு செய்ய போகிறார்கள் என்பது மே 4ஆம் தேதி தெரிந்துவிடும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+