தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: தொங்கு சட்டசபை என்றால் என்ன? தமிழ்நாட்டில் இது நடக்குமா?

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல் வரலாற்றில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த போகிறது. பாரம்பரியமான திமுக, அதிமுக கட்சிகளிடம் இருந்து தமிழக வெற்றி கழகம், நாம் தமிழர் கட்சி என மக்கள் கவனம் திரும்பியுள்ளதா என்பதை வெளிக்கொணரும் ஒரு தேர்தலாக இது மாறியுள்ளது.

சட்டமன்ற தேர்தல் முடிவுகள் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் நிலையில் மக்கள் தொங்கு சட்டசபை குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் திமுக, அதிமுகவிற்கு அறுதி பெரும்பான்மை கொடுத்துவிட்டால் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அவ்வாறு நடக்காத பட்சத்தில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: தொங்கு சட்டசபை என்றால் என்ன? தமிழ்நாட்டில் இது நடக்குமா?

ஒரு மாநில சட்டமன்றத்தில் உள்ள மொத்த தொகுதிகளில் பாதிக்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றும் கட்சி அல்லது கூட்டணி தான் ஆட்சி அமைக்கும். ஆனால் சில சமயங்களில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை எந்த ஒரு கட்சிக்கோ அல்லது கூட்டணிக்கு ஏற்படாமல் போகும் போது அதனை தொங்கு சட்டசபை என்பார்கள், ஆங்கிலத்தில் hung assembly ஆகும்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 234 தொகுதிகள் உள்ளன. இதில் 118 இடங்கள் பெறும் கட்சி ஆட்சி அமைக்க முடியும். ஒரு வேளை எந்த கட்சியும் 118 இடங்களை பெறவில்லை அது அதான் தொங்கு சட்டசபை. இவ்வாறு தொங்கு சட்டசபை அமைந்தால் பல அரசியல் நாடகங்களை நாம் காண முடியும்.

ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை எனும் போது அதற்கு சற்றே நெருக்கமான இடங்களில் வெற்றி பெற்ற கட்சி அல்லது கூட்டணி மற்ற கட்சிகளின் ஆதரவை கோரலாம். இந்த முறை தேர்தல் முடிவுகள் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக தவெக, நாதக என்ற சக்திகளையும் கொண்டிருப்பதால் தான் தொங்கு சட்டசபை குறித்து பேச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Also Read

எந்த கட்சியும் 118 இடங்களை வெல்ல வில்லை, திமுக அல்லது அதிமுக அதற்கு நெருக்கமான இடங்களை கைப்பற்றியுள்ளன, தவெக ஆதரவளித்தால் ஆட்சி அமைக்க முடியும் என்ற சூழல் உண்டாகுமா என்ற கேள்வி எழுகிறது. அப்படி நடந்தால் இந்த தேர்தலில் விஜய் கிங் மேக்கராக உருவாக வாய்ப்புள்ளது.

சில கட்சிகள் வெளியில் இருந்து ஆட்சிக்கு ஆதரவு தருவதாக அறிவிக்கலாம் அல்லது கூட்டணியில் கூட இணையலாம். இருந்தாலும் தொங்கு சட்டசபை என்பது தமிழ்நாட்டில் அரிது. அப்படி தொங்கு சட்டசபை அமைந்தாலும் அது பெரிய தலைவலி தான். 5 ஆண்டுகள் ஆட்சி முடியும் வரை பிரதான இடங்களை பெற்ற கட்சிக்கு தலை மேல் தொங்கும் கத்தி போல தான் இருக்கும். ஏனெனில் ஆட்சிக்கான ஆதரவு திரும்ப பெறபட்டால் ஆட்சி கவிழும்.

Recommended For You

விஜய்-இன் தமிழக வெற்றி கழகம் எத்தனை இடங்களை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு மட்டுமில்லாமல் பல தொகுதிகளில் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வேட்பாளர்கள் வெல்லும் சூழலை உண்டாக்கும் என சொல்லப்படுகிறது எனவே தேர்தல் முடிவுகள் பல சுவாரஸ்யங்களை கொண்டதாக இருக்க போகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+