அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் உரம்! வேளாண் அதிகாரிகளின் துணையோடு நடக்கிறதா? விவசாயிகள் சோகம்!

தமிழ்நாட்டில் முதன்மைத் தொழிலாகக் கருதப்படுவது "விவசாயம்". உழைக்கும் மக்களில் பாதி பேருக்கு விவசாயம் தான் வாழ்க்கையாக இருக்கிறது. சாதாரணமாக, நாம் சமைப்பதற்குக் கடைகளில் சென்று பொருட்கள் வாங்குவதற்கே மிகவும் சிரமப்படுகிறோம். சிலர் வீட்டில் இருந்துகொண்டே குவிக் காமெர்ஸ் தலங்களின் மூலம் தேவைப்படும் பொருட்களை ஆர்டர் செய்கின்றனர். ஆனால் அதை உற்பத்தி செய்து கொடுக்கும் விவசாயிகளுக்குத்தான் பல சிரமங்கள்.

பொதுவாக, இந்தியாவில் ஆண்டு முழுவதும் காரீஃப், ராபி, ஜைத் ஆகிய மூன்று விதமான பயிர்கள் உற்பத்தி செய்யப்பட்டுகிறது. அறுவடை செய்யப்படும் சீசனை பொறுத்து விவசாயிகளுக்கு நல்ல சாகுபடியும், லாபமும் கிடைக்கும்.

 அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் உரம்! வேளாண் அதிகாரிகளின் துணையோடு நடக்கிறதா? விவசாயிகள் சோகம்!


தூத்துக்குடியில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்த நிலையில் விவசாயிகள் இந்த பருவத்திற்கான ராபி பயிர்களை 3 லட்சம் ஹெக்டர் நிலங்களில் பயிரிட்டுள்ளனர். இதற்கு ஆறுகள், ஓடைகள், கிணறுகள் மற்றும் மழைநீரை நம்பி அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் சாகுபடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் யூரியா, டிஏபி(டை அமோனியம் பாஸ்பேட்), பொட்டாஷ் போன்ற உரங்களின் தேவை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்தும், விவசாயிகளுக்குப் பயிர்களை சாகுபடி செய்ய முடியவில்லை. காரணம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் விற்பனையாளர்கள் உரங்களை முறைகேடாக பதுக்கி வைத்து அதை அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள் என்று விவசாயிகள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. ராகவன் கூறுகையில், "தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் விற்பனையாளர்களிடம் யூரியா, டிஏபி போன்ற உரங்களுக்குத் தட்டுப்பாடு இருப்பதால் விவசாயிகளுக்குப் பயிர் சாகுபடி செய்யச் சற்று சிரமமாக உள்ளது. இதற்கிடையில், கருங்குளம் பகுதியைச் சேர்ந்த பெயர் தெரியாத விவசாயி ஒருவர், வேளாண் அதிகாரிகள் மற்றும் உர விற்பனையாளர்களின் உதவியுடன் உரங்களைச் சில வீடுகள் மற்றும் குடோன்களில் சட்ட விரோதமாகப் பதுக்கித் தட்டுப்பாடு ஏற்பட்டது போல காண்பிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

ஒரு மூட்டை யூரியா ரூ. 350 முதல் ரூ. 400 வரை விற்கப்படுகின்றது. ஆனால், அதன் உண்மையான விலை ரூ. 266.50 மட்டுமே. அது மட்டுமில்லாமல், டிஏபி-யின் உண்மையான விலை ரூ. 1350. ஆனால், அது ரூ. 2000-க்கு விற்கப்படுகின்றது.

தனியார் விற்பனையகங்கள் மற்றும் சொசைட்டிகள் அந்தந்த விற்பனையாளர்கள் கொள்முதல் செய்ததற்கான ரசீது வழங்குவதில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சட்டவிரோதமான பதுக்கல்கள் மற்றும் முறைகேடான விலை நிர்ணயம் குறித்து விவசாயிகள் அதிகாரிகளிடம் புகார் அளித்தாலும் அவர்கள் அந்த விவரங்களை உர விற்பனையாளர்களிடம் கூறி விடுகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு மறுமுறை உரம் விற்பனை செய்ய அவர்கள் முன்வருவது இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்த காரணத்தால், விவசாயிகள் முறைகேடுகளைப் பற்றிப் புகார் செய்ய தயங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆலந்தா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுடலைமணி கூறுகையில், "பயிர் வளர்ச்சிக்கு யூரியா, டிஏபி போன்ற உரங்கள் அதிக அளவில் தேவைப்படுகிறது. ஆனால், அது அருகில் உள்ள தொடக்க வேளாண்மை சங்கத்தில் கிடைப்பதில்லை. இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் அவர்கள் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை" என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மக்களாகிய நாம் உணவுப் பொருட்களின் உற்பத்திக்கு விவசாயிகளையே பெரிதும் நம்பி இருக்கிறோம். அப்படிப்பட்ட விவசாயிகளுக்கு பிரச்சினை ஏற்படும் போது உடனடியாக மாநில அரசு அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உரங்கள் அதிக வலை விலையில் விற்கப்படாமல் தடுக்கும் வகையில் சட்டங்கள் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+