கடந்த குருவை பருவத்தில் தனியார் விதை விற்பனை நிறுவனங்களிடமிருந்து விதைகளை வாங்கி பயிரிட்டதால் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தரமான விதைகளை உறுதி செய்வதற்காக விதை உற்பத்தியை அதிகரிக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது விவசாயிகள் 75 சதவீதம் தனியார் நிறுவனங்களிடமிருந்தும், 20% வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையிடம் இருந்தும் மீதமுள்ள 5 சதவீதம் சொந்தமாக உற்பத்தி செய்வதாகவும் கூறியுள்ளனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் செய்தி தொடர்பாளரான N. வீரசேகரன் கூறுகையில் வேளாண் துறை தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்றும், கூட்டுறவு சங்கங்கள் மூலம் விதை விற்பனை செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் விவசாய கல்லூரிகள் மற்றும் பயிற்சி மையங்களுக்கு சொந்தமான பயன்படாத நிலங்களையும் விதை உற்பத்திக்கு ஏற்றதாக எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை சுட்டிக்காட்டிய அவர், ஒவ்வொரு ஒன்றியத்திலும் கூடுதல் விதை உற்பத்தி நிலையங்களை அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
விவசாயிகள் விதை மேலாண்மைக்கு மாவட்ட அளவிலான குழுக்களை அமைக்கவும், மாவட்ட அதிகாரிகள், வேளாண் நிபுணர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த விவசாயிகளைக் கொண்ட குழுவை உருவாக்கவும் கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த வாரம் திருச்சியில் நடைபெற்ற விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில் விதை உற்பத்தி தொடர்பான கோரிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேச முடிவு செய்தனர்.
கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திடம் இருந்து விதைகளைப் பெற்று வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் 35 முதல் 40 சதவீத விதைத் தேவையை பூர்த்தி செய்து வருவதாக வேளாண் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், கிராம குழுக்கள் மூலம் 10 முதல் 15 சதவீத விதைத் தேவையை பூர்த்தி செய்கின்றன, மீதமுள்ளவை தனியார் நிறுவனங்களிடம் இருந்து பெறப்படுகின்றன என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த குறுவை பருவத்தில் லால்குடி வட்டாரத்தில் மட்டும் 46 டன் நெல் விதைகளை விவசாயிகளுக்கு சப்ளை செய்துள்ளோம். வேளாண்மைத் துறையின் மூலம் பூச்சிகளை எதிர்க்கும் வகையிலான விதைகள் வழங்கப்பட்டாலும், சான்று பெறாத தனியார் ஏஜென்சிகள் மூலம் விவசாயிகள் ஏமாற்றப்படுகின்றனர். இதுவே முதன்மைக் காரணம். விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு வெளிச்சந்தையில் நல்ல விலை கிடைக்கும் என்று எதிர்பார்த்து, நல்ல ரகங்களையே விரும்புகின்றனர். இதனால் தான் விதை பற்றாக்குறை ஏற்படுகிறது என்று சுகுமார் என்ற அதிகாரி கூறியுள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications