குறைந்தது தங்கம் விலை: தமிழ்நாட்டில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

தமிழ்நாட்டில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. நேற்று தங்கம் விலை ஏறிய நிலையில் இன்று விலை சரிந்துள்ளது. தமிழ்நாட்டின் பிரதான நகரங்களான சென்னை, கோவை, மதுரை, திருச்சியில் இன்று தங்கம் விலை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை லேசாக விலை சரிந்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் நேற்று விலை உயர்ந்து ஒரு கிராம் 13255 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதுவே இன்று 45 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் ஆபரண தங்கம் 13,210 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 360 ரூபாய் விலை குறைந்து 1,05,680 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

குறைந்தது தங்கம் விலை: தமிழ்நாட்டில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

தங்கம் தீபாவளி நாளில் விலை மாறாமல் இருந்தது. ஆனால் நேற்று திடீரென கிராமுக்கு 95 ரூபாய் விலை உயர்ந்தது. அதுவே இன்று கிராமுக்கு 45 ரூபாய் விலை குறைந்துள்ளது. இனி வரும் நாட்களில் தங்கம் விலை இப்படி ஏற்ற இறக்கமாகவே இருக்கும் என சொல்லப்படுகிறது.

Also Read

24 கேரட் தங்கம் விலையை பொறுத்தவரை ஒரு கிராம் 14,411 ரூபாய்க்கும் 10 கிராம் 1,44,110 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் இன்று ஒரு கிராம் 10,810 ரூபாய்க்கும் ஒரு சவரன் 86,480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை இன்று மாறவில்லை. தமிழ்நாட்டில் இன்று ஒரு கிராம் வெள்ளி 205 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2.05 லட்சம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை கடந்த 5 நாட்களாக விலை மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது.

Recommended For You

உலக சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 4,112 டாலர்களாக குறைந்துள்ளது. கடந்த வாரம் தங்கம் விலை சர்ரென குறைந்து ஒரு அவுன்ஸ் 4000 டாலருக்கு கீழ் சென்றது. அதன் பின்னர் விலை படிப்படியாக உயர்ந்தது. எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 24 கேரட் தங்கம் 10 கிராம் 1,43,166 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. அமெரிக்க பணவீக்க தரவுகள் விரைவில் வெளியாக உள்ளன. இதில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளிவந்தால் அது தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே தங்கம் விலையின் போக்கு எப்படி இருக்கும் என்பது பணவீக்க தரவுகளின் மூலம் தெரிய வரும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+