தங்கம் விலையில் நடந்த அதிசயம்.. வெள்ளி தந்த சர்ப்பிரைஸ்.. மக்களே நகை வாங்க செம சான்ஸ்..!!

தமிழ்நாட்டில் தொடர்ந்து 4 நாட்களாக உயர்ந்து வந்த தங்கம், இன்றைய தினம் ஒரு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. பொதுவாக வர்த்தக நாட்களில் தங்கம் விலை லேசான மாற்றங்களாவது இருக்கும். ஆனால் இன்றைய தினம் தமிழ்நாட்டில் தங்கம் விலை மாறாமல் இருக்கிறது.

தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை மாற்றம் இல்லாமல் நேற்றைய விலைக்கே விற்கப்படுகிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் நேற்று 60 ரூபாய் விலை உயர்ந்து 13,195 ரூபாய்க்கு விற்கப்பட்டது, அதே விலைக்கு தான் இன்றும் விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,05,560 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தங்கம் விலையில் நடந்த அதிசயம்.. வெள்ளி தந்த சர்ப்பிரைஸ்.. மக்களே நகை வாங்க செம சான்ஸ்..!!

கடந்த வாரம் தொடர்ந்து நான்கு நாட்கள் பெரிய சரிவை சந்தித்த தங்கம் அதன் பின்னர் தொடர்ந்து நான்கு நாட்கள் விலை உயர்வு கண்டது. குறிப்பாக சனிக்கிழமை கிராமுக்கு 10 ரூபாய் விலை கூடியது. திங்கள்கிழமை கிராமுக்கு 15 ரூபாய் , செவ்வாய்க்கிழமை கிராமுக்கு 50 ரூபாய் , புதன்கிழமை கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்த தங்கம், கடந்த 4 வர்த்தக நாட்களில் மட்டும் கிராமுக்கு 135 ரூபாயும் சவரனுக்கு 1080 ரூபாயும் அதிகரித்தது. நல்வாய்ப்பாக இன்று விலை மாறவில்லை.

Also Read

24 கேரட் தங்கம் விலையை பொறுத்தவரை ஒரு கிராம் 14,395 ரூபாய்க்கும் 10 கிராம் 1,43,950 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் இன்று ஒரு கிராம் 10,796 ரூபாய்க்கும் ஒரு சவரன் 86,368 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒரு கிராம் வெள்ளி 5 ரூபாய் விலை குறைந்து 215 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2.15 லட்சத்திற்கும் விற்கப்படுகிறது. தொடர்ந்து 5 நாட்களாக வெள்ளி விலை மாற்றமில்லாமல் இருந்து இன்று விலை குறைந்துள்ளது.

Recommended For You

அமெரிக்க மத்திய வங்கியின் கூட்டம் நடைபெற்ற நிலையில் அதில் வட்டி விகிதம் மாற்றமில்லாமல் அதே அளவிலேயே நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வட்டி உயரும் என்ற எதிர்ப்பார்ப்பில் தான் முதலீட்டாளர்கள் தங்கத்தில் இருந்து பணத்தை எடுத்து பத்திரங்களில் முதலீடு செய்தனர் இதனால் தங்கம் விலை சரிந்தது. தற்போது வட்டியில் மாற்றமில்லை என்பதால் தங்கம் விலை பெரிய அளவில் உயராது பெரிய சரிவையும் காணாது என கூறும் நிபுணர்கள் ஒரு வரம்பிற்குள்ளேயே தங்கம் விலை ஏறி இறங்கும் என்கின்றனர். உலக சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 4,038 டாலர்களாக வர்த்தகமாகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+