Gold Rate: இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை..!! செப்டம்பர் தொடக்கமே இப்படியா?

தொடர்ந்து 2 நாட்களாக விலை குறைந்து வந்த தங்கம் இன்று தடாலடியாக விலை உயர்ந்து அதிர்ச்சியை தந்துள்ளது. அந்த வகையில் சென்னை, கோவை, திருச்சி உட்பட தமிழ்நாட்டின் பிரதான நகரங்களில் தங்கம் விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம்.

சென்னையில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை கூடியுள்ளது. ஒரு கிராமுக்கு 305 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. இன்று சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 14,240 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ஒரே நாளில் 2,440 ரூபாய் விலை உயர்ந்து அதிர்ச்சி தந்துள்ளது. இன்றைய தினம் ஒரு சவரன் தங்கம் 1,13,920 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Gold Rate: இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை..!! செப்டம்பர் தொடக்கமே இப்படியா?

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் விலை சரிந்து வந்த தங்கம் இன்று விலை உயர்ந்துவிட்டது. கடந்த இரண்டு நாட்களில் 22 கேரட் ஆபரண தங்கம் விலை ஒரு கிராமுக்கு 435 ரூபாய் விலை சரிந்தது. சவரனுக்கு 3,480 ரூபாய் விலை குறைந்தது. ஆனால் இன்று கிராமுக்கு 305 ரூபாயும் சவரனுக்கு 2,440 ரூபாயும் விலை உயர்ந்திருக்கிறது.

24 கேரட் தங்கம் விலையை பார்த்தால் ஒரு கிராம் 333 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிராம் 15,535 ரூபாய்க்கும் 10 கிராம் 1,55,350 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 11,969 ரூபாய்க்கும் ஒரு சவரன் 95,752 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

Also Read

வெள்ளியின் விலை இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி 5 ரூபாய் விலை உயர்ந்து 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 5000 ரூபாய் விலை உயர்ந்து 2.55 லட்சத்திற்கும் விற்கப்படுகிறது. செப்டம்பர் 1ஆம் தேதி கிராமுக்கு 10 ரூபாய் விலை குறைந்த வெள்ளி, நேற்று விலை மாறாமல் இருந்தது, ஆனால் இன்று 5 ரூபாய் கூடிவிட்டது.

உலக சந்தையில் தங்கம் விலையில் நிகழும் மாற்றங்களே தமிழ்நாட்டில் சில்லறை விற்பனையிலும் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களுக்கு காரணமாகும். உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் ஸ்பாட் கோல்டின் விலை 4,438 டாலர்களாக உள்ளது, ஒரு அவுன்ஸ் வெள்ளி 66 டாலர்களாக உள்ளது. உலக சந்தையிலும் தங்கம் கடந்த சில நாட்களாக சரிவில் இருந்து மீண்டு வந்துள்ளது. இந்தியாவில் எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 10 கிராம் தங்கம் விலை 1,54,220 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

Recommended For You

ஜூன், ஜூலை மாதங்களில் விலை குறைந்த தங்கம், வெள்ளி ஆகஸ்ட் மாதம் வேகமாக உயர்ந்தது. இதனால் லாபத்தை பதிவு செய்யும் நோக்கத்தில் பலரும் தங்கத்தை விற்க தொடங்கியதால் விலை குறைந்தது. ஆனால் மீண்டும் விலை ஏற தொடங்கிவிட்டது. எனவே முதலீடு செய்யவும் தங்கம் வாங்கவும் நினைப்பவர்கள் விலை ஏறட்டும் இறங்கட்டும் என காத்திருக்காமல் கையில் பணம் இருக்கும் போதெல்லாம் முதலீட்டை மேற்கொள்வது நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+