தமிழ்நாட்டில் தொடர்ந்து 2ஆவது நாளாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. அக்டோபர் மாதத்தில் தங்கம் விலை பெரிதாக சரிவடைந்த நிலையில் நவம்பரில் நேற்று, இன்று என இரண்டு நாட்களுமே தங்கம் விலை லேசாக உயர்ந்துள்ளது. சென்னை,மதுரை , திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களில் இன்று தங்கம் விலை என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை லேசாக உயர்ந்துள்ளது . சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை 25 ரூபாய் உயர்ந்து 12,800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 200 ரூபாய் விலை கூடி 1,02,400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தங்கம் கடந்த வாரம் வரலாற்றில் இல்லாத சரிவை கண்ட நிலையில் இந்த வாரம் லேசாக விலை உயர்ந்துள்ளது.

நேற்று, இன்று என இந்த இரண்டு நாட்களில் 22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு 70 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. சவரனுக்கு 560 ரூபாய் விலை கூடியுள்ளது. இந்த இரண்டு நாட்கள் தங்கம் விலை உயர்ந்திருந்தாலும் வரலாற்று உச்சபட்ச விலையான 1.34 லட்சத்துடன் ஒப்பிடும் போது இன்று தங்கம் 32,000 ரூபாய் விலை குறைவில் தான் இருக்கிறது.
24 கேரட் தங்கம் விலையை பொறுத்தவரை ஒரு கிராம் 13,964 ரூபாய்க்கும் 10 கிராம் 1,39,640 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் இன்று ஒரு கிராம் 10,475 ரூபாய்க்கும் ஒரு சவரன் 83,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை இன்று மாறவில்லை. தமிழ்நாட்டில் இன்று ஒரு கிராம் வெள்ளி 200 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2 லட்சம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை அதன் வரலாற்று உச்சபட்ச விலையை விட கிலோவுக்கு 2.25 லட்சம் ரூபாய் விலை சரிந்துள்ளது.
அமெரிக்காவில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் டிரம்பின் குடியரசு கட்சி பெரும்பான்மை பெறுகிறதா அல்லது ஜனநாயக கட்சி வெற்றி பெறுகிறதா என்பதை பொறுத்து உலக தங்க சந்தையில் இனி வரும் நாட்களில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.
அதே வேளையில் அமெரிக்க மத்திய வங்கி வர கூடிய மாதங்களில் வட்டி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன என்ற தகவலை வெளியிட்டுள்ளது. எனவே வட்டி உயரும் என்ற எதிர்ப்பார்ப்பில் முதலீட்டாளர்கள் தங்கத்தில் இருந்து பணத்தை எடுத்து பத்திரங்களில் முதலீடு செய்கின்றனர். அதே போல ஈரான் போர் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. இதனால் தங்கம் விலை பெரிதாக உயராமல் இருக்கிறது. உலக சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 3,923 டாலருக்கு வர்த்தகமாகிறது. உலக சந்தையில் தங்கம் விலை லேசாக உயர்ந்துள்ளதே இந்தியாவிலும் தங்கம் விலை உயர காரணம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்


Click it and Unblock the Notifications

