தமிழ்நாடு முழுவதும் உள்ள பகுதிகளுக்குப் பயணம் செய்ய, ஹெலிகாப்டர் சேவை விரைவில் வர உள்ளது. இந்தியாவில் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை எப்போதும் இல்லாத வகையில் வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், தமிழ்நாட்டில் ஹெலிகாப்டர் சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசு இதற்கான சிறப்பு திட்டத்தை உருவாக்கி வருகிறது என்றும், தமிழ்நாடு நகரங்கள் மற்றும் டவுன்களுக்கு இடையே பயணம் செய்வதற்காக ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்துவதற்கான அரசாணை (G.O.) வெளியிடத் திட்டமிட்டுள்ளது என்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் (TIDCO) நிர்வாக இயக்குநர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு, நேஷ்னல் சிவில் ஏவியேஷன் கொள்கை மற்றும் மத்திய அரசின் ஹெலிகாப்டர் கொள்கை ஆகிய இரண்டையும் பயன்படுத்தி ஒரு திட்டத்தையும், செயல்வடிவத்தையும் உருவாக்கி வருவதாக சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், தமிழ்நாடு முழுவதும் பயன்படுத்தப்படாத சுமார் 80 ஹெலிபேட்களை, ஹெலிகாப்டர் நிறுவனங்கள் பயன்படுத்தி நகரங்கள் மற்றும் டவுன்களுக்கு இடையே சிறப்பான வான்வழி இணைப்பை வழங்க முடியும். குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், TIDCO அமைப்பு தான் பிராந்திய விமான போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதற்கான நோடல் ஏஜென்சி ஆகும்.
ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறிய விமானங்களைப் பயன்படுத்தி மாநிலத்திற்குள் வான்வழி போக்குவரத்தை மேம்படுத்துவது மூலம் விமான நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல், சாமானிய மக்கள் மலிவு விலையில் பறப்பதற்கும் வழிவகுக்கும்.
இதன் மூலம் ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறிய விமானங்களின் பயன்பாடு அதிகரித்து, அதன் புக்கிங் சேவை, மெயின்டனென்ஸ்-ல் துவங்கி உள்ளூர் உற்பத்தித் துறையை, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் வழிவகுக்கும் என்று TIDCO நிர்வாக இயக்குநர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் பல்வேறு கட்டங்களில் செயல்படுத்தப்படும் என்று TIDCO திட்ட இயக்குநர் பி. கிருஷ்ணமூர்த்தி கூடுதல் விபரத்தை கொடுத்துள்ளார். அவசர மருத்துவ சேவைகள், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, பொழுதுபோக்கு, மருத்துவம் மற்றும் மத சுற்றுலா, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான விரைவு பயணம் போன்ற பல்வேறு விஷயங்களுக்கு இதைப் பயன்படுத்தலாம் என்று கூறினார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications