கோயில்களில் காணிக்கையாக செலுத்தப்படும் தங்கத்தை உருக்கி ரூ.17.81 கோடி வருவாய்- அமைச்சர் சேகர்பாபு..

தமிழ்நாட்டில் பல புகழ்பெற்ற கோயில்கள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன. தமிழக கோயில்கள் வேண்டுதல்களை முன் வைக்கும் பக்தர்கள் அதற்கு காணிக்கையாக தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட பொருட்களை வழங்குகின்றனர்.

இவ்வாறு கோயில்களில் வழங்கப்படும் தங்கப்பொருட்களை அரசு என்ன செய்கிறது என்பதற்கான விளக்கம் தரப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கோயில்களில் பயன்படுத்தாமல் இருந்த தங்க பொருட்களை உருக்கி 24 கேரட் தங்க கட்டிகளாக மாற்றி வங்ககளில் டெபாசிட் செய்து 17.81 கோடி ரூபாயை வட்டி வருமானமாக ஈட்டியிருப்பது தெரிய வந்துள்ளது.

கோயில்களில் காணிக்கையாக செலுத்தப்படும் தங்கத்தை உருக்கி ரூ.17.81 கோடி வருவாய்- அமைச்சர் சேகர்பாபு..

தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றன. இந்த விவாதத்தின் போது கோயில்களில் பயன்படுத்தப்படாத தங்க பொருட்கள் குறித்து அமைச்சர் சேகர் பாபு குறிப்பிட்டார். தமிழகத்தில் கோயில்களுக்கு பக்தர்கள் வழங்கும் தங்கப்பொருட்கள் பயன்படுத்தப்படாமல் இருந்தால் அவற்றை அரசு தங்க கட்டிகளாக மாற்றி விடுகிறது என கூறினார்.

கோயில்களில் இருந்து பெறப்படும் தங்கப் பொருட்கள் மும்பையில் உள்ள அரசு நாணய கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் அவை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றப்படுகின்றன என தெரிவித்தார். இப்படி கட்டிகளாக மாற்றப்பட்ட தங்கமானது வங்கிகளில் தங்க முதலீடு திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்படுகிறது. அந்த வகையில் அரசு அண்மை கோயில்களில் பயன்படுத்தப்படாத தங்க பொருட்களை தங்கக் கட்டிகளாக மாற்றி எஸ்பிஐ வங்கியில் தங்க முதலீடு திட்டத்தின் கீழ் முதலீடு செய்திருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

இந்த தங்கக் கட்டிகளை முதலீடு செய்வதன் மூலம் மட்டும் தமிழ்நாடு அரசுக்கு ஆண்டுக்கு 17.81 கோடி ரூபாய் வட்டி வருமானமாக கிடைக்கிறது என தெரிவித்தார். இவ்வாறு கிடைக்கும் வட்டி வருமானமானது சம்பந்தப்பட்ட கோயில்களின் வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது என அமைச்சர் சேகர் பாபு குறிப்பிட்டார்.

இந்த திட்டம் ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். இதே போல கோயில்களில் பயன்படுத்தப்படாத மற்றும் பயன்படுத்த இயலாத வெள்ளிப் பொருட்களையும் கட்டிகளாக உருக்குவதற்கான அனுமதி கிடைத்திருப்பதாகவும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக திருச்சிராப்பள்ளி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோயிலில் இருந்து 424.26 கிலோ தங்கம் எடுக்கப்பட்டு உருக்கி தங்க கட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன என தெரிவித்தார். தமிழ்நாடு முழுவதும் இருக்கும் 21 கோயில்களில் இருந்து 1000 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான தங்க பொருட்கள் இவ்வாறு பெறப்பட்டு உருக்கப்பட்டதாக அமைச்சர் சேகர பாபு தெரிவித்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+