வெயில் காலத்தை சமாளிக்க பெரும்பாலான அலுவலகங்கள், வீடுகளில் ஏ.சி.யை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கோடைக் காலத்தில் மின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் மின் தேவை மற்றும் வெப்பநிலையின் திடீர் அதிகரிப்பு ஆகியவை டிஸ்டிரிக்ட் கூலிங் சிஸ்டம் (district cooling system) போன்ற மாற்று தீர்வுகளை செயல்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு மாநில அரசு தள்ளப்படுகிறது.
டிஸ்டிரிக்ட் கூலிங் சிஸ்டம் என்பது ஒரு ஆலையில் குளிர்ந்து நீரை உற்பத்தி செய்து அதனை குழாய்கள் வாயிலாக அனுப்பி முழு கட்டிடங்களையும் கூல் செய்யும் அமைப்பாகும்.

ஐக்கிய அரபு நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்துடன் இணைந்து, டிஸ்டிரிக்ட் கூலிங் சிஸ்டத்தை செயல்படுத்தவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை தமிழக மாநில திட்டக்குழு தயாரித்து வருகிறது. தொழில்துறை மற்றும் சுற்றுச்சூழல், எரிசக்தி துறையுடன் இணைந்து டிஸ்டிரிக்ட் கூலிங் சிஸ்டத்தை செயல்படுத்துவதற்கான செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக தகவல்.
டிஸ்டிரிக்ட் கூலிங் சிஸ்டம் தொழில்நுட்பத்தின் படி, முதலில் சென்டரலைஸ்டு கூலிங் ஆலையில் குளிர்ந்த நீர் உற்பத்தி செய்யப்படும். பின்னர் அது பிரத்யேகமாக அமைக்கப்பட்ட குழாய்களின் நெட்வொர்க் மூலம் பல்வேறு கட்டிடங்கள் அல்லது ஆலைகளுக்கு மாற்றப்படும். இதன் மூலம் முழு கட்டிடமும் கூலிங் பெறும். ஒரு கன்ட்ரோல் சிஸ்டம், குளிர்விக்கும் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் நீரின் வெப்பநிலையை ஒழுங்குப்படுத்தும் மற்றும் விநியோக நெட்வொர்க் மூலம் நீரின் செல்லும் விகிதத்தை கண்காணிக்கும்.
Tabreed India நிறுவனத்தின் தலைவர் சுதீர் பெர்லா கூறுகையில், நகர கேஸ் விநியோகம் போன்று நிலத்தடி குழாய் நெட்வொர்க் தேவை உள்ளது. எனவே டிஸ்டிரிக்ட் கூலிங் சிஸ்டத்துக்கான ஆரம்ப முதலீடு அதிகம். இருப்பினும், இந்த கூலிங் சிஸ்டத்தை பயன்படுத்துவதன் மூலம் பல கட்டிடங்கள் ஆலையின் செலவை பகிர்ந்து கொள்ளலாம்.
இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் கணிசமான மின்சாரத்தை சேமிக்கலாம். சிப்காட் அமைக்கும் தொழில் பூங்காக்களில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் தற்போது கவனம் செலுத்தப்படுகிறது என்று தெரிவித்தார்.
டிஸ்டிரிக்ட் கூலிங் சிஸ்டம் பயன்பாடுக்கு வந்தால், சென்னை, திருச்சி மற்றும் கோவை உள்ளிட் பெரும் நகரங்களில், அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் மின்சார மீட்டர் மற்றும் குடிநீர் மீட்டர் இருப்பது போல், விரைவில் கூலிங் மீட்டரும் இருக்கும்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications