கங்கைகொண்டான்: பெண்கள் சௌகரியமான முறையில் தொழில்பூங்காக்களில் பணி புரிவதை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு தொழில் துறை வீட்டு வசதி நிறுவனம், கங்கைகொண்டான் தொழில் பூங்காவில் பெண் பணியாளர்களுக்கு என 500 படுக்கைகள் கொண்ட விடுதியை அமைக்க இருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் அமைந்திருக்கும் சிப்காட் தொழில் பூங்காவில் டாடா பவர் நிறுவனம் சார்பாக சோலார் செல்கள் உற்பத்தி ஆலை அமைக்கப்படுகிறது. இங்கே பெரும்பாலும் பெண்களுக்கே வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் சில வாரங்களுக்கு முன் தமிழ்நாடு அரசு பாக்ஸ்கான் நிறுவனத்திற்கான பிரம்மாண்ட விடுதியை கட்டிக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் சௌகரியமான முறையில் தங்கி வேலை செய்யும் பொருட்டு தமிழ்நாடு தொழில்துறை வீட்டு வசதி நிறுவனம் 500 படுக்கைகளை கொண்ட தங்குமிடத்தை கட்டமைக்க இருக்கிறது. இது தொடர்பாக தமிழ்நாடு தொழில் துறை வீட்டு வசதி நிறுவனம் மற்றும் டாடா பவர் சோலார் லிமிடெட் ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன்படி இந்த பெண்கள் தங்கும் விடுதியில் உயர்தரமான வசதிகள் செய்து தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமையலறை, உணவு உண்ணும் வரை, அரங்கங்கள் ,விளையாட்டு இடங்கள் மருத்துவ அறைகள் உள்ளிட்டவை ஏற்படுத்தி தரப்படும் என தமிழ்நாடு தொழில் துறை வீட்டு வசதி நிறுவனம் கூறியுள்ளது.
கங்கைகொண்டான் சிப்காட் தொழில் பூங்காவில் தொழில்துறை சார்பாக வீட்டு வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. மொத்தம் 40 கோடி ரூபாய் செலவில் தொழில் பூங்காவில் வேலை செய்யும் பெண்கள் தங்கும் வகையிலான அனைத்து வசதிகளும் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 145 அறைகள் 870 படுக்கைகள் கொண்டு தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பான்மையான இடங்கள் டாடாவில் பணிபுரியும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழ்நாடு தொழில்துறை வீட்டு வசதி நிறுவனம் சிப்காட் தொழில் பூங்காக்களுக்குள்ளேயே பெண்களுக்கான தங்கும் விடுதிகளை ஏற்படுத்தி வருகிறது. சிறு சேரியில் 807 படுகைகள் கொண்ட தங்கும் விடுதி , கங்கைகொண்டானில் 870 படுகைகள் கொண்ட தங்கும் விடுதி, சூளகிரியில் 1495 படுக்கைகள் கொண்ட தங்கும் விடுதி, இருங்காட்டுக்கோட்டை பகுதியில் 801 படுக்கைகள் கொண்ட தங்கும் விடுதி, செய்யாறு பகுதியில் 441 படுகைகள் கொண்ட தங்கும் விடுதிகளை அமைத்து வருகிறது.
மொத்தமாக 204 கோடி ரூபாய் செலவில் 4,414 படுக்கைகள் கொண்ட பெண்கள் தங்கும் விடுதிகள் சிப்காட் தொழில் பூங்காக்களுக்குள்ளேயே கட்டமைக்கப்பட்டு வருகின்றன.
வெளியூர்களிலிருந்து பெண்கள் சௌகரியமாக வந்து இங்கே தங்கி பணிபுரிய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவிக்கிறது. கங்கைகொண்டான் பூங்காவில் 315 ஏக்கர் பரப்பளவில் சோலார் செல் உற்பத்தி ஆலையை டாடா நிறுவியுள்ளது. இதில் 80 சதவீதம் பேர் பெண்களே ஊழியர்களாக பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
Story written by: Devika
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications