இந்தியாவின் வேகமான வளர்ச்சிக்கு வேலைவாய்ப்பு சந்தையில் பெண்களின் பங்கீடு மிகவும் முக்கியம். ஆனால் பெண்களை வீட்டின் சமையலறையில் இருந்து தொழிற்சாலைக்கும், அலுவலகத்திற்கும் அழைத்து செல்ல ஏதுவான சூழ்நிலையை இந்தியாவில் சில மாநிலங்களே சிறப்பாக செய்கிறது.
அதில் நீண்ட காலமாக முன்னோடியாக இருப்பது தமிழ்நாடு என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. சத்துணவு, இலவச கல்வியில் துவங்கி தற்போது அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு கல்லூரி படிப்பை தொடர மாதம் 1000 ரூபாய் ஊக்க தொகை, இலவச பஸ் வசதி வரையில் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் படிகளாக மாறியுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் ஒகு டேட்டா தற்போது வெளியாகியுள்ளது.

இந்தியாவின் உற்பத்தித் துறையில் உள்ள மொத்தப் பெண் தொழிலாளர்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் தமிழ்நாட்டில் உள்ளனர். இது பல கள ஆய்வுகள் மட்டுமின்றி மாநிலத்தில் உள்ள தொழிற்சாலை தளங்களிலிருந்தும் தெளிவாகத் தெரிகிறது.
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட 2019-20 ஆம் ஆண்டின் தொழில்துறையின் வருடாந்திர கணக்கெடுப்பின்படி, இந்திய தொழில்துறைகளில் பணிபுரியும் 15.8 லட்சம் பெண்களில் 6.79 லட்சம் அல்லது 43% தமிழ்நாட்டில் உள்ளனர். இது தேசிய சராசரியை விட மாநிலத்தின் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் அதிகமாக.
இதேபோல் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தால் வெளியிடப்பட்ட ஜூலை 2022-ஜூன் 2023 ஆண்டுக்கான தொழிலாளர் கணக்கெடுப்பின் வருடாந்திர அறிக்கையில், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் பெண் (15-59 வயதுக்குட்பட்ட) ஊழியர்களின் விகிதம் 43.9% ஆக உள்ளது, தேசிய சராசரி விகிதம் 39.8% மட்டுமே.
தமிழ்நாடில் பெண்கள் அதிகம் பணியாற்றும் துறைகளாக தோல், ஜவுளி மற்றும் ஆட்டோமொபைல் துறைகள் விளங்குகிறது. இதோடு வளர்ந்து வரும் துறைகளான எலக்ட்ரிக் வாகனங்கள், சோலார் செல் உற்பத்தி, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் காலணிகளை தொழிற்சாலைகளிலும் பெண்கள் அதிகளவில் வேலைக்கு அமர்த்தப்பட்டு வருகிறார்கள்.
இதன் மூலம் அடுத்த சில வருடத்தில் தொழிற்சாலைகளில் பெண்களின் பங்கீடு பெரிய அளவில் அதிகரிக்கும் என சந்தைநிபுணர்கள் கூறுகின்றனர். இது உற்பத்தி துறை சார்ந்த தரவுகள் மட்டுமே, சேவை துறை, சுயதொழில் போன்றவற்றில் தமிழ்நாடு பெண்களின் பங்கீடு மிகவும் அதிகம்.
தொழிற்சாலைகள் என்றாலே ஆண்களுக்கான இடம் என்பதை முதன் முதலில் உடைத்தது டாடா குழுமம் தான், சிறிய வர்த்தகத்தில் பெண்களின் பங்கீடு அதிகமாக இருந்தாலும் கார்ப்பரேட் அளவில் பெரும் மாற்றத்தை செய்தது டாடா குழுமத்தின் ஓசூர் டைட்டன் தொழிற்சாலை தான்.
1980களில் சென்னை மட்டுமே முக்கிய தொழிற்சாலை பகுதியாக பார்க்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசு டாடா குழுமத்துடன் இணைந்து ஓசூரில் டைட்டன் வாட்ச் தொழிற்சாலையை அமைத்தது. இதை தாண்டி கலாச்சார தடைகளை உடைத்து பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்து அதிகப்படியான பெண்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.
அன்று துவங்கிய புரட்சி தற்போது இந்திய தொழில்துறைகளில் பணிபுரியும் ஒட்டுமொத்த பெண்களில் 43 சதவீதம் என்ற மாபெரும் பங்கீட்டை தமிழ்நாடு கொண்டுள்ளது.
தமிழ்நாட்டில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்குக் காரணம், பெண்கள் தைரியமாக இருப்பதோடு அவர்கள் வேலைக்குச் செல்வதற்கு குடும்பங்கள் உறுதுணையாக இருப்பது தான் என திருவள்ளூரில் உள்ள கேட்டர்பில்லர் இந்தியா பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலை மேலாளர் லட்சுமி உமாபதி கூறுகிறார்.
லட்சுமி உமாபதி கேட்டர்பில்லருக்கு முன் மத்தியப் பிரதேசத்தில் உள்ள கம்மின்ஸ் இந்தியா, சென்னையில் உள்ள ஷ்னைடர் எலக்ட்ரிக், பெங்களூரில் உள்ள குர்லோன் மற்றும் கோயம்புத்தூரில் உள்ள கிர்லோஸ்கர் பிரதர்ஸின் அனைத்து மகளிர் தொழிற்சாலையில் கடைத் தளங்களில் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓலா ஸ்கூட்டர் தொழிற்சாலையில் தற்போது 3,000 பெண்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் பொறியியல் டிப்ளமோ மற்றும் அறிவியல் பட்டம் பெற்றவர்கள், அவர்கள் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு நேர பணியில் சேர்ந்தவர்கள். ஓலா தொழிற்சாலையில் பணியாற்றும் பெண் ஊழியர்களின் சராசரி வயது 22-24 என்று ஓலாவின் தலைமை மார்கெட்டிங் பிரிவு அதிகாரி அன்ஷுல் கண்டேல்வால் கூறுகிறார்.
ஹிந்துஜா குழுமத்தின் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பிரபலமான வாகனங்களான Dost மற்றும் Bada Dost ஆகியவற்றின் ஓசூர் உற்பத்தி தளத்தில் முதல் முறையாக அனைத்து பெண்கள் தயாரிப்பு வரிசையை உருவாக்கி சுமார் 80 பெண் ஊழியர்களை நியமித்தது.
இதேபோல் Bosch நிறுவனத்தின் சென்னை ஒரகடம் தொழிற்சாலை முழுக்க முழுக்க பெண் ஊழியர்கள் கொண்டு இயங்கி வருகிறது, கங்கைகொண்டான் தொழிற்சாலை 80 சதவீத பெண் ஊழியர்கள் கொண்டு இயங்கி வருகிறது. இது மட்டும் அல்லாமல் Tata Electronics, Tata Power, Ather, Bharat New-energy, Greaves Electric Mobility, மற்றும் ஐபோன் உற்பத்தியாளர்களான Foxconn மற்றும் Pegatron ஆகியவையும் அதிகப்படியான பெண்களை பணியில் அமர்த்தியுள்ளது.
நாட்டின் பிற நகரங்களை காட்டிலும் சென்னை மற்றும் தமிழ்நாட்டை பெண்களின் வேலைவாய்ப்பிற்கான மையமாக மாற்ற முக்கியமான காரணம், நன்கு இணைக்கப்பட்ட நகர்ப்புற உள்கட்டமைப்பு, பாதுகாப்பான போக்குவரத்து, நல்ல கல்வி வசதிகள் மற்றும் குழந்தைகள் காப்பகங்கள்/குழந்தை பராமரிப்பு ஆதரவு, பாதுகாப்பான தங்குமிடம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றை முக்கிய காரணமாக அவதார் குழுமத்தின் நிறுவனர்-தலைவர் சவுந்தர்யா ராஜேஷ் கூறுகிறார்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications