விஜய் அரசு வழங்கும் 1 பவுன் தங்கம், பட்டுப்புடவை பெறுவது எப்படி? அண்ணன் சீர் திட்டம் என்றால் என்ன?

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் திருமணமாகும் பெண்களுக்கு அண்ணன் சீராக 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுப்புடவை வழங்கும் திட்டம் குறித்த அரசாணையை வெளியிட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பாக பெண் வாக்காளர்களை மையப்படுத்தி தான் பல்வேறு வாக்குறுதிகள் வெளியிடப்பட்டன. அந்த வகையில் பெண் வாக்காளர்கள் அளித்த வாக்குகள் தான் தவெகவை ஆட்சி கட்டிலில் அமர வைத்தது. இந்நிலையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பெண் வாக்காளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறது.

விஜய் அரசு வழங்கும் 1 பவுன் தங்கம், பட்டுப்புடவை பெறுவது எப்படி? அண்ணன் சீர் திட்டம் என்றால் என்ன?

மகளிருக்கு இலவச பேருந்து பயணம், தாய்மாமன் சீர் திட்டம் ஆகியவற்றின் வரிசையில் தற்போது அண்ணன் சீர் திட்டம் குறித்த அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில், தமிழர் மரபில் திருமணத்தின் போது அண்ணன் வழங்கும் சீர் என்பது அன்பு, பாசம், பாதுகாப்பு மற்றும் பொறுப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 5 இலட்சம் திருமணங்கள் நடைபெறுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் எப்போதும் அக்கறை கொண்டு துணை நிற்கும் என்ற உறுதியை வெளிப்படுத்தும் விதமாக, புதிய வாழ்க்கையை தொடங்கும் மணப்பெண்களுக்கு அன்பு பரிசாக தமிழக அரசு சார்பாக 8 கிராம் தங்க நாணயமும், ஒரு பட்டுப் புடவையும் வழங்கப்பட வேண்டும் என்பது அரசின் தொலைநோக்கு ஆவணத்தின் ஒரு திட்டம் என தெரிவிக்கபப்ட்டுள்ளது. 2026-27 ஆம் ஆண்டுக்கான திருத்த வரவு செலவு திட்ட மதிப்பீட்டு உரையில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Also Read

தமிழ்நாட்டில் ஓராண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்குள் வருமானம் உள்ள குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு திருமணத்தின் போது 8 கிராம் தங்க நாணயமும், ஒரு பட்டுப்புடவையும் வழங்கும் அண்ணன் சீர் திட்டத்தை ஆண்டுதோறும் செயல்படுத்த நிர்வாக அனுமதியும், இதற்கான தொகையாக நடப்பு நிதியாண்டில் முதற்கட்டமாக 812 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நடைபெறும் திருமணங்களுக்கு, தமிழ்நாட்டை சேர்ந்த, தகுதியுடைய மணப்பெண்களுக்கு 22 கேரட் தரத்திலான 8 கிராம் தங்க நாணயமும். ஒரு பட்டுப் புடவையும் வழங்கப்பட உள்ளன என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான தகுதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் தனியே வெளியிடப்படும் என்றும் விண்ணப்பம் செய்ய தனி இணையதளம் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை வாங்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, தகுதியான ஒப்பந்ததாரர் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்க நாணயமும், பட்டுப் புடவையும் கொள்முதல் செய்யப்படும் என்றும் இத்திட்டம் அரசாணை வெளியிடப்படும் நாள் முதல் நடைபெறும் திருமணங்களுக்கு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தமிழ்நாட்டை சேர்ந்த ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு திருமணத்தின் போது அரசு சார்பாக ஒரு பவுன் தங்க நாணயமும், ஒரு பட்டுப்புடவையும் வழங்கப்பட உள்ளது. இன்றைய தேதிக்கு 22 கேரட் தங்கம் ஒரு சவரன் வாங்க வேண்டும் என்றாலே 1.20 லட்சம் ரூபாய் வரை தேவை. பல குடும்பங்களுக்கும் எட்டாக்கனியாக தங்கம் மாறி வரும் நிலையில் அரசின் இந்த திட்டம் ஏழை, எளிய குடும்பங்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

Recommended For You

இந்த திட்டத்தில் ஓராண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்குள் வருமானம் கொண்ட குடும்பங்களை சேர்ந்த மணப்பெண்களுக்கு மட்டுமே கிடைக்கும். விரைவில் இந்த திட்டத்திற்கு எப்படி விண்ணப்பம் செய்வது, என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட உள்ளன. பெரும்பாலும் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வருமான சான்று, திருமண அழைப்பிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் கேட்கப்படும். எனவே மணமக்கள் இவற்றை எல்லாம் தயார்ப்படுத்தி கொண்டு விண்ணப்பிக்க தயாராக இருக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+