தமிழக அரசு தரும் ரூ.50,000 உதவித்தொகை..! 30ஆம் தேதி தான் கடைசி..! மாணவர்களே உடனே அப்ளை பண்ணுங்க..!

தமிழ்நாட்டை சேர்ந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் எப்படியாவது அரசு வேலை வாங்கிவிட வேண்டும் என்பதற்காக படித்து வருகின்றனர். அப்படி அரசு வேலைக்காக படிக்கும் இளைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக மத்திய அரசு வேலைகளுக்கு தமிழ்நாட்டில் இருந்து அதிகளவிலான இளைஞர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்பதை முன்னிறுத்தி தமிழக அரசு சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதனை யூபிஎஸ்சி ஆளுமை தேர்வுக்கான ஊக்கத்தொகை திட்டம் என அழைக்கின்றனர். இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு 50,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

தமிழக அரசு தரும் ரூ.50,000 உதவித்தொகை..! 30ஆம் தேதி தான் கடைசி..! மாணவர்களே உடனே அப்ளை பண்ணுங்க..!

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தமிழ்நாடு அரசு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யூபிஎஸ்சி நடத்தும் குடிமை பணி தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் ஊக்கத்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது என தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், 2026-ஆம் ஆண்டு முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்களுக்கு 50,000 ரூபாய் உதவி தொகை நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அறிவித்துள்ளது.

Also Read

இந்த ஊக்கத்தொகையை பெற நடப்பு ஆண்டில் யூபிஎஸ்சி குடிமைப்பணி முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள், https://skilldevelopment.tn.gov.in/ என்ற இணையதளத்தில் 21.11.2026 முதல் 30.11.2026 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் யூபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று, முதன்மை தேர்வுக்கு தயாராகி வரும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு 25,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். யூபிஎஸ்சி முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்று, நேர்முக தேர்வுக்கு தயாராகும் தமிழக மாணவர்களுக்கு 50,000 ரூபாய் ஊக்கத்தொகை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவித்துள்ளது.

Recommended For You

தமிழக அரசின் ஊக்கத்தொகையை பெற விரும்பும் விண்ணப்பதாரர் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும், யூபிஎஸ்சி குடிமை பணிகள் தேர்வின் முதல்நிலை அல்லது முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம். எனவே தகுதியுள்ள தமிழக மாணவர்கள் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://skilldevelopment.tn.gov.in/ வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மத்திய அரசு பணிகளில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக சேர வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது. பொதுவாக இவ்வாறு தேர்வுக்கு தயாராகும் மாணவர்களில் பலர் போதிய நிதி இல்லாமல் பாதியிலேயே கைவிட்டு சென்றுவிடுகின்றனர். அப்படி ஒரு நிலை வர கூடாது அவர்களுக்கு உரிய நிதி உதவி கிடைக்க வேண்டும் என்ற நோக்கிலும் இதன் மூலம் இன்னமும் அதிகமான இளைஞர்கள் மத்திய அரசு பணிக்கு படிக்க முன் வருவார்கள் என்ற நம்பிக்கையுடனும் அரசு இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+