Gold Rate: தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! ஒரு வாரம் வெயிட் பண்ணி இருந்தா ரூ.9200 மிச்சம்..!!

தமிழ்நாட்டில் நவம்பர் 11ஆம் தேதி தொடங்கி இன்று வரை தங்கம் விலை தொடர்ச்சியாக குறைந்து கொண்டே வருகிறது. தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சி, தங்க நகை வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களுக்கு சிறந்த வாய்ப்பை தந்துள்ளது. முதலில் சென்னை,மதுரை , திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களில் இன்று தங்கம் விலை என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை 45 ரூபாய் குறைந்து 11,465 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 360 ரூபாய் விலை சரிந்து 91,720 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Gold Rate: தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! ஒரு வாரம் வெயிட் பண்ணி இருந்தா ரூ.9200 மிச்சம்..!!

இந்த வாரத்தில் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரையிலான இந்த 6 நாட்களில் தங்கம் கிராமுக்கு 1150 ரூபாய் சரிந்துள்ளது. ஒரு சவரனுக்கு 9,200 ரூபாய் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் தங்கம் வாங்காமல் ஒரு வாரம் காத்திருந்து இன்று தங்கம் வாங்கும் நபர்களுக்கு ஒரு சவரனுக்கு 9200 ரூபாய் மிச்சமாகி இருக்கும்.

தங்கம் விலை இந்த மாதத்தில் தொடர்ந்து 10ஆவது வர்த்தக நாளாக விலை குறைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த 10 வர்த்தக நாட்களில் மட்டும் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு 1,745 ரூபாயும் ஒரு சவரனுக்கு 13,960 ரூபாயும் விலை சரிந்துள்ளது. 10 கிராமுக்கு 17,450 ரூபாய் விலை குறைந்துள்ளது. இது வரலாற்றிலேயே இல்லாத விலை வீழ்ச்சி.

Also Read

24 கேரட் தங்கம் விலையை பொறுத்தவரை ஒரு கிராம் 12,508 ரூபாய்க்கும் 10 கிராம் 1,25,080 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் இன்று ஒரு கிராம் 9,381 ரூபாய்க்கும் ஒரு சவரன் 75,048 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நாளை ஞாயிற்று கிழமை என்பதால் தங்கம் விலை மாறாது இன்றைய விலைக்கே விற்கப்படும். எனவே வீக் எண்டில் தங்க நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

வெள்ளியின் விலை இன்று மாற்றமில்லாமல் நேற்றைய விலைக்கே விற்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரு கிராம் வெள்ளி 175 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி விலை 1.75 லட்சம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை அதன் வரலாற்று உச்சபட்ச விலையில் இருந்து கிராமுக்கு 250 ரூபாயும் கிலோவுக்கு 2.50 லட்சம் ரூபாயும் விலை குறைந்துள்ளது.

Recommended For You

உலக சந்தையில் தங்கம், வெள்ளி விலைகள் குறைந்தது தான் தமிழ்நாட்டில் அவற்றின் விலை சரிய காரணம். கடந்த ஓராண்டில் இல்லாத அளவாக ஒரு அவுன்ஸ் தங்கம் 3,524 டாலர்களாக இருக்கிறது. ஒரு அவுன்ஸ் வெள்ளி 40 டாலர்களாக விலை சரிந்துவிட்டது. ஆனால் நேற்றில் இருந்து இந்த வரம்பிலேயே விலை நீடிப்பதால் தான் இன்று தமிழ்நாட்டில் தங்கம் விலை பெரியதாக சரியவில்லை.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+