வெள்ளி விலை இன்னும் எவ்வளவு குறையும்? முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

நடப்பாண்டு ஜனவரி மாதம் வெள்ளி விலை சில்லறை விற்பனையில் ஒரு கிலோ 4.25 லட்சம் ரூபாய்க்கு சென்றது. அப்போது வெள்ளி தான் அடுத்த தங்கம் என நினைத்து வாங்கிய அனைவருமே தற்போது நஷ்டத்தில் உள்ளனர். ஏனெனில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை 1.80 லட்சம் ரூபாயாக சரிந்து நிற்கிறது.

உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் வெள்ளி விலை 45 டாலர்களாக உள்ளது. ஜனவரி 28, 2026 அன்று வெள்ளி ஒரு அவுன்ஸ் விலை 116 டாலர்களாக இருந்தது. அதாவது வெள்ளி விலை 60.7% குறைந்துள்ளது.ரெலிகேர் புரோக்கிங் நிறுவனத்தின் ஆராய்ச்சி மூத்த துணை தலைவர் அஜித் மிஸ்ரா , ஜனவரியில் கடுமையான ஏற்றத்திற்கு பிறகு பலரும் லாபத்தை பதிவு செய்தனர் அதே வேளையில் தொழில்துறையில் வெள்ளியின் தேவை குறைந்தது, தங்கம் விலையும் சரிந்தது ஆகியவையே வெள்ளி விலை வீழ்ச்சிக்கு காரணம் என கூறுகிறார்.

வெள்ளி விலை இன்னும் எவ்வளவு குறையும்? முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

முதலீட்டு தேவை மற்றும் தொழில்துறை நுகர்வு ஆகிய இரண்டிலும் உள்ள தொடர்பு தான் வெள்ளி விலையின் வேகமான வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்கிறார். வெல்த்மில்ஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் ஈக்விட்டி இயக்குநர் கிராந்தி பதினி தங்கமும் வெள்ளியும் தற்போது திருத்தத்தில் உள்ளன, அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்புகள் மற்றும் வலுவான டாலர் ஆகியவை அழுத்தத்தை தருகின்றன என்கிறார். தங்கத்துடன் ஒப்பிடும்போது வெள்ளியில் அதிக ஊக வர்த்தகம் நடப்பதும் இதற்கு காரணம் என்கிறார்.

Also Read

உலக சந்தையில் வெள்ளி ஒரு அவுன்ஸுக்கு இன்று 45 டாலராக உள்ளது இது 41 டாலருக்கு கீழ் சென்றால் பெரிய விலை சரிவு தடுக்க முடியாது என நிபுணர்கள் கூறுகின்றனர். ஒருவேளை 41 டாலரில் இருந்து மீண்டு வந்தால் 50 முதல் 54 டாலர்கள் வரை செல்ல வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். மிக குறைந்த விலையில் அவசரமாக வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர்.

Recommended For You

அமெரிக்க பத்திர வருமானம் மற்றும் டாலர் வலிமை ஆகியவை தான் எதிர்கால வெள்ளி விலையை தீர்மானிக்கும் என்பதால் தற்போதைக்கு வெள்ளியில் புதிய முதலீடு செய்யாமல் தவிர்க்கலாம் என்கின்றனர். இந்திய சந்தையில் வெள்ளி விலையில் ஏற்ற இறக்கம் தொடரக்கூடும் என்றும் 1.60 லட்சம் வரை ஒரு கிலோ வெள்ளியின் விலை செல்ல வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் கணிக்கின்றனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+