சுட சுட பிரியாணி.. அந்த டங் டங் சத்தம்.. ரூ.10000 கோடிக்கு பிஸ்னஸ் நடக்குதுன்னா சும்மாவா..!

சந்தோஷமாக இருந்தாலும் சரி, சோகமாக இருந்தாலும் சரி, பிரியாணி தான் எமோஷன் என தமிழ்நாட்டு மக்கள் ரகரகமாக பிரியாணியை தினமும் தோறும் ரசித்து ரூசித்து வருகின்றனர். இதனாலேயே பல புதிய பிராண்டுகள் பிரியாணி-க்காக தமிழ்நாடு முழுவதும் உருவாகி வருகிறது. இதேவேளையில் தரமான பிரியாணியை கண்டுப்படித்து யூடியூபர்கள் தொடர்ந்து வீடியோ போடுவதால் மக்கள் தேடி சென்று அந்த பிரியாணியை சாப்பிடும் வழக்கத்திற்கும் வந்துள்ளனர்.

இப்படி கன்னியாகுமரி முதல் சென்னை வரையில், ஓசூர் மூலம் கடலூர் வரையில் பிரியாணி-க்கான டிமாண்டும், சந்தையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 10 வருடத்தில் உணவு பிரிவில் பல புதிய உணவுகள் டிரெண்டாகி வந்தாலும் பிரியாணியின் ஆதிக்கம் சற்றும் குறையவில்லை. இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டின் பிரியாணி மார்கெட் எப்படி இருக்கிறது என்பதை அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

 சுட சுட பிரியாணி.. அந்த டங் டங் சத்தம்.. ரூ.10000 கோடிக்கு பிஸ்னஸ் நடக்குதுன்னா சும்மாவா..!

தமிழ்நாட்டின் பிரியாணி சந்தை 10,000 கோடி ரூபாய் மதிப்பை எட்டியுள்ளது. தொழில் நிபுணர்களின் கணக்கீட்டின்படி, இந்த பிரியாணி சந்தையில் வகைப்படுத்தப்பட்ட துறையின் பங்களிப்பு வெறும் 2,500 கோடி ரூபாய் தான், வகைப்படுத்தப்படாத துறையின் ஆதிக்கம் தான் அதிகம். சிறு உணவகங்கள் மற்றும் தெருவோர வியாபாரிகள் உள்ளிட்ட பிரிவின் பங்கீடு 7,500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது.

இதேவேளையில் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை தான் பிரியாணி வர்த்தகத்தின் மையமாக விளங்குகிறது. மாநிலத்தின் மொத்த பிரியாணி வணிகத்தில் சுமார் 50% பங்களிப்பை சென்னை நகரம் மட்டுமே பங்களிக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

தமிழ்நாட்டில் பிரியாணி சந்தையில் முக்கிய பிராண்டுகளாக இருப்பது திண்டுக்கல் தலப்பகட்டி, ஜூனியர் குப்பண்ணா, புஹாரி, அஞ்சப்பர், சேலம் ஆர்.ஆர். பிரியாணி, பொன்னுசாமி மற்றும் எஸ்.எஸ். ஹைதராபாதி பிரியாணி போன்ற முன்னணி பிராண்டுகள் வலுவான வரத்தகத்தை பெற்றுள்ளன.

இந்த நிறுவனங்களுக்கு அப்பால், இந்த பிரியாணி உணவை தனித்துவமான முறையில் வழங்கும் ஏராளமான நடுத்தர அளவிலான நிறுவனங்கள் செயல்படுகின்றன. குறிப்பாக புதிய தெருவோர வியாபாரிகள் சந்தைக்கு வண்ணம் உள்ளதாலும், இதற்கு அதிகப்படியான உணவு பிரியர்கள் விரும்பி செல்வதும் வாடிக்கையாகியுள்ளது.

இதேபோல் சென்னையில் நாள் முழுவதும் பிரியாணி விற்பனை செய்வதை தாண்டி, தற்போது பல கடைகள் இரவு முழுவதும் மலிவு விலையில் பிரியாணியை விற்கின்றனர். குறிப்பாக புட் ஸ்ட்ரீட்-களில் விற்பனை செய்து வெற்றி பெற்று பல புதிய பிராண்டுகள் சென்னையில் உருவாகியுள்ளது. இப்படி பல வகையில் பிரியாணி வர்த்தகம் தமிழ்நாட்டில் 10000 கோடி ரூபாய் அளவுக்கு பறந்து விரிந்துள்ளது.

சரி பிற மாநிலங்களில் பிரியாணி 300 ரூபாயில் இருந்து 500 ரூபாய் வரையில் விற்கப்படும் வேளையில் தமிழ்நாட்டில் பிரியாணியின் விலை நிலவரம் என்ன தெரியுமா. பொதுவாக ஒரு பொருளின் விலை அதன் செலவுகளை பொருத்தும், உரிமையாளரின் லாப அளவுகளை பொருத்தே அமையும்.

இப்படி தமிழ்நாட்டில் பிரியாணி விற்கும் நிறுவனம் மற்றும் பயன்படுத்தப்படும் இறைச்சியின் வகையைப் பொறுத்து விலை மாறுபடும். சாலையோர உணவகங்களில், ஒரு தட்டுக் சிக்கன் பிரியாணி 100 ரூபாய் முதல் வாங்கலாம். இதில் பாதி என்றால் 60 ரூபாய் முதல் கிடைக்கும். இதேவேளையில் இறைச்சியின் விலை அடிப்படையில் மட்டன் பிரியாணி பொதுவாக அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் பிரபலமான பிராண்டுகள் ரூ.250 முதல் ரூ.400 வரை பிரியாணியை விற்கிறது. இதேபோல் சில பிரீமியம் பிராண்டுகள் ரூ.600 க்கு மேல் கட்டணம் வசூலிக்கிறது. அதே நேரத்தில் ஹை-எண்ட் உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் ரூ.1,600 க்கு மேல் விலையில் பிரியாணி விற்பனை செய்து ஆடம்பரமான அனுபத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன.

எப்படி மக்கள் ஹோட்டல்களுக்கு சென்று பல சுவையில் பிரியாணியை சுவைக்கிறார்களோ, இதேபோல் வீட்டிலும் பல சுவையில் பிரியாணி சுமைக்க ஆண்களும் சரி, பெண்களும் சரி விரும்புகின்றனர். இந்த வேகமாக வளர்ந்து வரும் மார்கெட் ஆக இருக்கும் வேளையில் பல புதிய மலாசா நிறுவனங்கள் களத்தில் இறங்கியுள்ளது.

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் மசாலா பிராண்டுகள் இந்த வர்த்தகத்தை கைப்பற்ற தீவிரமான முயற்சியில் இறங்கியுள்ளது. உதாரணமாக, சென்னை தளமையான ஸ்டார்ட்-அப் குக்கட் சமுக வலைத்தளம் மூலம் அதிகப்படியான வாடிக்கையாளர்களை பெற்று வர்த்தகத்தில் அசத்தி வருகிறது. இந்த நிறுவவனம் ஒவ்வொரு மாதமும் சுமார் 30,000 பிரியாணி கிட்களை விற்பனை செய்கிறது.

இதேபோல் தமிழ்நாட்டில் மற்றொரு முன்னணி மசாலா பிராண்டின் நிறுவனர் விரைவில் ஐந்து புதிய பிரியாணி மசாலா பேக்குகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

எப்படி மக்கள் பிரியாணியை கொண்டுக்கிறார்களோ, அதேபோல் நிறுவனங்களும் இதை வர்த்தகமாக மாற்றி கொண்டாடி வருகிறது. சமீபத்தில் வெளியான ஸ்விக்கி வெளியிட்ட How Chennai Swiggy'd in 2024 அறிக்கையில், சென்னை மக்கள் ஜனவரி 1 முதல் நவம்பர் 22 வரையிலான காலத்தில் மட்டும் சுமார் 46.1 லட்சம் சிக்கன் பிரியாணிகளை ஆர்டர் செய்துள்ளனர். இதில் அதிகப்படியாக ஒரு நபர் 66 பிரியாணியை ஆர்டர் செய்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+