தமிழ்நாட்டு மக்கள் அதிகம் முதலீடு செய்வது இந்த விஷயத்தில் தான்..!! வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!

பொதுவாக மக்கள் மத்தியில் அவர்களுடைய வருமானத்திற்குச் செலவுகளும் இருப்பது எந்த அளவுக்கு இயல்பான ஒன்றோ, அதேபோலத் தான் முதலீடும். கையில் குறைவான பணம் இருக்கக் கூடிய மக்கள் பாதுகாப்பான முதலீட்டைத் தேர்வு செய்யும் வழக்கத்தையும், கையில் உபரியாக அல்லது லிக்விட் கேஷ் ஆக இருக்கும் போது பொருட்களை வாங்குவதும், ரிஸ்க் உள்ள முதலீடுகளைத் தேர்வு செய்யவும் மனம் வரும்.

ஆனால் நீண்ட கால அடிப்படையிலான முதலீடு, அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் முதலீடு என்ற பிரிவுக்குச் சென்றால் முதலீட்டுக்கான ஆஃப்ஷன் குறைந்து விடும். தமிழ்நாட்டு மக்கள் நீண்ட கால முதலீட்டுக்காக விரும்பும் முதலீடுகள் குறித்து ஆய்வு செய்யத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் ஆய்வை நடத்தியது.

தமிழ்நாட்டு மக்கள் அதிகம் முதலீடு செய்வது இந்த விஷயத்தில் தான்..!! வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!

இந்த ஆய்வில் பலதரப்பட்ட மக்கள் தங்களுடைய விரும்பு முதலீட்டைத் தேர்வு செய்தாலும், அதிகப்படியான மக்களின் தேர்வாக இருந்தது 2 விஷயம் தான். முதல் 2 இடத்தைப் பிடித்த முதலீட்டுக்கும் அடுத்த 2 இடத்தைப் பிடித்த முதலீட்டுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது என்பது தான் வியப்பான விஷயம்.

நீண்ட கால முதலீட்டுக்கு எது பெஸ்ட்..? என்ற கேள்வியை முன்வைத்து 5 ஆஃப்ஷன்கள் கொடுத்து வாக்கெடுப்பு நடத்தியதில் சுமார் 802 பேர் வாக்களித்தனர். இதில் 33 சதவீதம் பேர் ரியல் எஸ்டேடையும், 31 சதவீதம் பேர் தங்கத்தையும் , 13 சதவீதம் பேர் பங்குச்சந்தையும், 13 சதவீதம் பேர் மியூச்சவல் பண்ட்-களையும், 10 சதவீதம் பேர் வங்கி வைப்பு நிதியை தேர்வு செய்துள்ளனர்.

மக்கள் தங்களுடைய தேர்வை வயதின் அடிப்படையிலும் தேர்வு செய்திருக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. இளம் தலைமுறையினர் பங்குச்சந்தை முதலீட்டில் அதிகப்படியான ஆர்வம் காட்டும் காரணத்தால் 26 சதவீத வாக்குகள் பங்குச்சந்தை மற்றும் மியூச்சவல் பண்ட் பெற்றுள்ளது.

இதேபோல் மில்லினியல், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் லாபம் கிடைக்க வேண்டும், அதேவேளையில் ரிஸ்க் இல்லாத முதலீடாக இருக்க வேண்டும் என்பதால் தங்கம், ரியல் எஸ்டேட் ஆகியவற்றைத் தேர்வு செய்திருக்கலாம். இதேபோல் 50 வயதுக்கு அதிகமானவர்கள், முத்த குடி மக்கள் ரிஸ்க் எடுக்க விரும்பாமல் வைப்பு நிதியைத் தேர்வு செய்திருக்கலாம்.

தமிழ்நாட்டு மக்கள் அதிகம் முதலீடு செய்வது இந்த விஷயத்தில் தான்..!! வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!

நீண்ட கால முதலீடுகளுக்கான சிறந்த தேர்வுகளில் வரலாற்று எப்போதும் முக்கியப் பங்கீட்டை கொண்டு இருந்தது ரியல் எஸ்டேட்டும் தங்கமும் தான். அரசர் காலத்தில் இருந்து இன்றைய நவீனக் காலம் வரையில் மண்ணும் பொன்னும் எப்போதும் முதலீட்டாளர்களை ஏமாற்றியது இல்லை. இவை இரண்டும் நீண்ட காலத்தில் நிலையான வருவாயையும் சொத்து மதிப்பில் ஏற்றத்தையும் வழங்கும் திறன் கொண்டவை என்பதைப் பல உதாரணங்கள் உள்ளது.

ஆனால் கடந்த சில வருடங்களாகப் பங்குச்சந்தை, கிரிப்டோகரன்சி போன்ற முதலீடுகளில் சிறிய முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர். இதனால் பெரும் பல பிரபலமான நிதி வல்லுனர்களும் ரியல் எஸ்டேட்டில் அதிகம் முதலீடு செய்ய வேண்டும், தங்கம் வாங்குவது இனி தேவையற்றது இப்படிப் பல கருத்துகள் முன்வைத்தனர்.

ஆனால் மறுமுனையில் நாட்டின் அனைத்து பெரு நகரங்களிலும் ஆடம்பர வீடுகளுக்கான டிமாண்ட் அதிகமாக உள்ளது, மும்பையில் தினமும் ஒரு 5 கோடி ரூபாய்க்கு அதிக மதிப்புடைய சொத்துகளை வாங்கி வருகிறார். சர்வதேசச் சந்தையில் டாலர் மதிப்பு சரிவால் தங்கம் விலை 2075 டாலர் வரையில் உயர்ந்து 8 மாத உயர்வை தொட்டு உள்ளது.

ரியல் எஸ்டேட்: நீண்ட காலச் செல்வச் சேமிப்புக்கான சிறந்த வழிகளில் ஒன்றாக எப்போதும் ரியல் எஸ்டேட் இருந்து வருகிறது. நிலத்தின் மதிப்பு மக்கள் தொகை, வர்த்தகம் விரிவாக்கத்திற்காகக் காலப்போக்கில் அதிகரித்துக்கொண்டே இருக்கும். இதனால் ரியல் எஸ்டேட் முதலீடுகள் நீண்ட காலத்தில் சிறந்த வருவாய்த் திறனை இயல்பாகவே கொண்டு உள்ளது. மேலும், ரியல் எஸ்டேட் மூலம் வாடகை வருமானமும் பெற முடியும்.

தங்கம்: எப்போதும் அனைத்துத் தரப்பு மக்களாலும் பாதுகாப்பான முதலீடாக நம்பக்கூடியவை. தங்கத்தின் மதிப்பு பொருளாதார ஏற்ற இறக்கங்களுக்கும் பணவீக்கத்திற்கும் எதிராகப் பாதுகாப்பாக இருக்கும், இதைத் தான் அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு நாட்டின் ரிசர்வ் வங்கியும் பாலோ செய்கிறது. மேலும், தங்கம் எளிதில் மாற்றக்கூடியதாக இருப்பதால் சாமானிய மக்களுக்கும் ஒரு சிறந்த முதலீடாகவே பார்க்கப்படுகிறது.

பங்குச்சந்தை முதலீடுகள் போல் 10 -15 காரணிகளை ஆய்வு செய்து, சந்தையின் போக்கைக் கவனித்து, உள்நாட்டு மற்றும் வர்த்தகச் சந்தைகளை அறிந்துகொண்டு முதலீடு செய்தாலும், பல நேரத்தில் பலருக்கு லாபம் கிடைப்பது இல்லை. ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் பங்குச்சந்தையில் லாபத்தைப் பெற்றவர்களுக்கு இணையாக நஷ்டத்தை எதிர்கொண்டவர்களும் இருக்கிறார்கள்.

இதனால் ரிஸ்க் எடுக்க விரும்பாத மக்கள் அதிகம் தேர்வு செய்யும் முதலீடாகத் தங்கமும், ரியல் எஸ்டேட்-ம் விளங்குகிறது. உங்களுடைய நீண்ட கால முதலீட்டுத் தேர்வு என்ன..? மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+