சென்னை: இந்தியாவில் செயல்படக்கூடிய ஒவ்வொரு மாநில அரசும் தனக்கென தனியாக வரி வருவாய் கொண்டிருக்கின்றன. மத்திய அரசி வரி பகிர்வு செய்தாலும் மாநில ஜிஎஸ்டி, கலால் வரி, பத்திரப்பதிவு கட்டணம் என பல வழிகளில் மாநில அரசுகளுக்கு வருவாய் கிடைக்கிறது.
அரசு எதில் வருமானம் பெறுகிறது?: தமிழ்நாடு அரசினை பொறுத்தவரை அரசுக்கு கிடைக்கக்கூடிய வருமானத்தில் 75 சதவீதம் சொந்த வரி வருவாய் மூலம் தான் கிடைக்கிறது. மாநில ஜிஎஸ்டி மற்றும் பிற வரிகள் , கட்டணங்கள், பத்திரப்பதிவின் மூலம் பெறப்படக்கூடிய வரி மற்றும் மது விற்பனையில் கிடைக்கக்கூடிய பணம் , பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்டவை மீது விதிக்கப்படும் வாட் வரி உள்ளிட்டவை தமிழ்நாடு அரசுக்கு வருவாயை நிர்ணயம் செய்பவையாக இருக்கின்றன.

14.5% உயர்ந்த சொந்த வரி வருவாய்: 2025 -26 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாய் 14.5% அதிகரித்துள்ளது ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாய் 43,070 கோடி ரூபாயாக உயர்ந்து இருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் இதே காலகட்டத்தை விட இது 14.5% அதிகம் . கடந்த நிதி ஆண்டு இதே காலாண்டில் தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாய் 37,605 கோடி ரூபாயாக இருந்தது. தி இந்து ஆங்கில நாளிதழ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
ஜிஎஸ்டி மூலம் எவ்வளவு?: தமிழ்நாடு அரசுக்கு கிடைத்துள்ள இந்த வரி வருவாயில் எஸ்ஜிஎஸ்டி எனப்படும் மாநில ஜிஎஸ்டி வரியின் மூலம் 15,761 கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருக்கிறது. இதுவே கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 13,019 கோடி ரூபாயாக இருந்தது. மற்ற வரிகள் மற்றும் கட்டணங்கள் மூலம் கிடைத்த வருமானம் சுமார் 24 சதவீதம் அதிகரித்து 3529.86 கோடி ரூபாயாக இருக்கிறது .
மதுபான விற்பனையில்: தமிழ்நாடு அரசுக்கு வரி மற்றும் பத்திரப்பதிவு கட்டணங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் 19% அதிகரிக்கிறது. தமிழ்நாடு அரசு முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவு கட்டணம் மூலம் இந்த ஆண்டு முதல் காலண்டில் 5868 கோடி ரூபாய் வருமானம் பெற்றுள்ளது. அதேபோல ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் மாநில கலால் வரி ( மதுபான வருவாய்) கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 2,791 கோடி ரூபாயாக இருந்தது இந்த ஆண்டு அது 2904 கோடி என உயர்வு கண்டிருக்கிறது.
நிலத்தின் மூலம் வருமானம் சரிவு: பெட்ரோல், டீசல் மற்றும் மதுபானங்கள் மீதான வாட் வரி உட்பட விற்பனை மற்றும் வர்த்தக வரியின் மூலம் அரசுக்கு இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 1454 கோடி வருமானம் கிடைத்திருக்கிறது இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஒப்பிடும் போது 7.8% அதிகமாகும். தமிழ்நாடு அரசுக்கு நிலத்தின் மூலம் கிடைக்கக்கூடிய வருமானம் இந்த ஆண்டு குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அரசு 156 கோடி ரூபாய் வருமானமாக ஈட்டியிருந்த நிலையில் இந்த ஆண்டு வெறும் 51 கோடி என சரிவடைந்து இருக்கிறது.
63,755 கோடி ரூபாய் வருமானம்: வரி அல்லாத வருவாய் தமிழ்நாடு அரசுக்கு குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டு முதல் காலாண்டில் 3946 கோடியாக இருந்தது இந்த ஆண்டு 2895 கோடி ரூபாய் என சரிவடைந்து இருக்கிறது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் அரசுக்கு சொந்த மாநில வருவாய், மத்தியிலிருந்து கிடைத்த வரி பகிர்வு, வரியில்லாத பிறவருவாய் மற்றும் பிற பங்களிப்புகள் என மொத்தமாக 63,755 கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 55,467 கோடி ரூபாயாகத்தான் இருந்தது. அதாவது இந்த ஆண்டு வருமானம் 14 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
வருவாய் அதிகரிப்பு என்பது தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை திறம்பட செயல்படுத்த உதவியாக இருக்கும். செலவுக்கு வரவுக்கும் இடையிலான வித்தியாசத்தை வருவாய் பற்றாக்குறை என அழைக்கிறோம். தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை என்பது முதல் காலாண்டில் 15 ,298 கோடி ரூபாயாக இருக்கிறது .
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications