டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலத்தில் ராணுவத்தினருக்கான போக்குவரத்து விமானங்களை தயாரிக்கும் ஒரு மாபெரும் ஒப்பந்தத்தினை டாடா மற்றும் ஏர்பஸ் செய்துள்ளது.
இந்த மெகா ஒப்பந்தத்தின் மதிப்பானது 22,000 கோடி ரூபாயாகும் (டாலரில் 2.66 பில்லியன் டாலர்கள்).
இந்தியாவில் தனியார் நிறுவனம் மூலமாக ராணுவ விமானம் தயாரிப்பது, இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் பயன்பாடு
இந்த திட்டத்தின் மதிப்பு 21,935 கோடி ரூபாயாகும். இந்த விமானங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் பயன்படுத்தலாம் என பாதுகாப்பு துறை செயலாளர் அஜய் குமார் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் மூலம் பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இறக்குமதியினை குறைக்க திட்டம்
இந்த திட்டத்திற்கு மின்சாரம் மற்றும் பிற சலுகைகள் வழங்கப்படும் என ஏற்கனவே குஜராத் அரசும் ஒப்புக் கொண்டுள்ளது.
டாடா - ஏர்பஸ்-ன் இந்த கூட்டணி மூலம் ராணுவ தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை இறக்குமதியினை சார்ந்திருப்பதைக் குறைக்க ,பிரதமரின் மேக் இன் இந்தியா திட்டம் சாதகமாக இருக்கும் எனலாம்.
மத்திய அரசுடன் ஒப்பந்தம்
ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 56 போக்குவரத்து விமானங்களை வாங்க மத்திய அரசு கடந்த மாதம் ஒப்புதல் வழங்கியிருந்தது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 16 விமானங்கள் பறக்கும் நிலையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 40 விமானங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்போது கிடைக்கும்?
இந்தியாவில் ஒரு தனியார் நிறுவனத்தால் ராணுவத்திற்கு விமானங்களை உற்பத்தி செய்து வழங்கப்படும் முதல் திட்டம் இதுவாகும்.
அதிகாரப்பூர்வ அறிக்கையின் படி முதலாவதாக 16 விமானங்கள் பறக்க தயாராக இருக்கும் நிலையில் செப்டம்பர் 2023 மற்றும் ஆகஸ்ட் 2025க்குள் வழங்க திட்டமிட்டுள்ளது. இதே குஜராத்தில் தயாரிக்கப்படும் முதல் விமானம் 2026ல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேதாந்தா + பாக்ஸ்கான் திட்டம்
ஏற்கனவே வேதாந்தா லிமிடெட் மற்றும் தைவானின் ஃபாக்ஸ்கான் நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் செமிகண்டக்டர்கள் தயாரிக்கப்படும் திட்டத்தின் மூலம், 19.5 பில்லியன் டாலர் முதலீட்டினை குஜராத் பெற்றுள்ளது. இந்த முதலீட்டின் மூலம் அகமதாபாத்திற்கு அருகில் மிகப்பெரிய ஆலைகள் அமைக்கப்படும் என்றும், இதன் மூலம் 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத்துக்கு ஜாக்பாட்
டாடா ஏர்பஸின் இந்த இணைப்பு பிரதமரின் மேக் இன் இந்தியா திட்டம் மூலம், வெளிநாட்டு நிறுவனங்களின் தொழில் நுட்பம் மற்றும் உபகரணங்களை சார்ந்திருப்பது குறைய காரணமாக அமையலாம். இந்த திட்டத்தின் மூலமும் பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கலாம். மொத்தத்தில் இது குஜராத்துக்கு பொற்காலம் என்றே கூறலாம்.
விமான படையின் திறன்
புதிய C- 295 போக்குவரத்து விமானம், இந்திய விமானபடையின் வயதான அவ்ரோ விமானத்திற்கு பதிலாக இருக்கும் என்று அரசாங்கம் கூறியது. இது உற்பத்தி மூலம் இந்திய விமான படையின் திறனை மேம்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications