தங்கம் விலை ஒரு பவுன் 80000 ரூபாயை தாண்டி நாளில் இருந்து மக்கள் தங்கள் கையில் இருக்கும் தங்க நகைகளை அடகு வைத்து பணமாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்த டிரெண்ட் குறிப்பாக லாக்டவுன் காலத்தில் பெரும் பகுதி மக்கள் மத்தியில் அதிகரித்தது கவனிக்கத்தக்க விஷயமாக இருந்து வருகிறது.
காலம் காலமாக வங்கிகளுக்கு ரீடைல் பிரிவு என்றாலேலே பர்சனல் லோன், கன்ஸ்யூமர் லோன் ஆக மட்டுமே இருந்த நிலையில் தற்போது தங்க கடன் முக்கியமானதாக மாறியுள்ளது. வங்கிகளுக்கும் மற்ற கடன்களை காட்டிலும் தங்க கடன் மிகவும் பாதுக்காப்பானது என்பதால் இப்பிரிவில் அதிகளவில் கடன் கொடுக்க தயாராகியுள்ளது.

இதனால் இந்தியா முழுவவதும் தங்க கடன் வர்த்தகம் வேகமாக வளர்ந்து வருகிறது, இதனால் இத்துறையில் பெரிய பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியங்கள் புதிதாக நுழைய தயாராகியுள்ளது.
நாட்டிலேயே அதிக தங்க கடன் கொடுக்கும் முன்னணி நிறுவனங்கள் பட்டியலில் பெரும் பங்கு வைத்திருப்பது முத்தூட் ஃபைனான்ஸ், மணப்புரம் ஃபைனான்ஸ். இப்பிரிவில் பெரிய வங்கிகள் கூட இல்லாத நிலையில் வர்த்தக இடைவெளி அதிகமாக இருக்கும் காரணத்தால் டாடா கேப்பிடல் மற்றும் கோத்ரேஜ் கேப்பிடல் போன்றவை இத்துறையில் இறங்கவும், வேகமாக தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
இதற்காக ஏற்கனவே தங்க நகை கடன் துறையில் இருக்கும் நிறுவனங்களை வாங்கி அதன் மூலம் விரிவாக்கம் செய்யும் ரூட்டை பிடித்துள்ளது.
ஜூலை 13 ஆம் தேதி டாடா கேப்பிடல் நிறுவனம் கேரள மாநிலத்தை சேர்ந்த Yogakshemam Loans Ltd நிறுவனத்தில் பெரும் பகுதி பங்குகளை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் Yogakshemam Loans Ltd நிறுவனத்தின் Yogloans சேவையை இந்தியா முழுவதும் புதிய கிளைகள் திறந்து விரிவாக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது டாடா கேப்பிடல்.
இதை தொடர்ந்து கோத்ரேஜ் கேப்பிடல் நிறுவனம் ஜூலை 22ஆம் தேதி Kanakadurga Finance நிறுவனத்தில் கோத்ரேஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் வாயிலாக பெரும் பகுதி பங்குகளை வாங்கி தனது வர்த்தகத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய தயாராகியுள்ளது.
இதன் மூலம் நேரடி வங்கி சேவையில் இல்லாத நிறுவனங்கள் அனைத்தும் தற்போது தங்க நகை கடனை முக்கிய வர்த்தகமாக பார்க்க துவங்கியுள்ளது உறுதியாகியுள்ளது.
இதேவேளையில் மத்திய அரசு தங்க இறக்குமதியை குறைக்கவும், மக்கள் வீட்டு லாக்கர்களிலும், பீரோக்களிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள பயன்படுத்தப்படாத தங்கத்தை மீட்டெடுத்து அதை பணமாக்கும் முயற்சியாக 'கோல்ட் மானிடைசேஷன் 2.0' திட்டம் ஆகஸ்ட் 2026-ல் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய குடும்பங்களின் கையில் சுமார் 30000 டன்னுக்கும் அதிகமான தங்கம் இருக்கும் வேளையில், இதை பணமாக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறக்கியுள்ளது. இதற்கிடையில் தான் டாடா, கோத்ரெஜ் போன்ற பெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியங்கள் தங்க நகை கடன் துறையில் இறங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications