இன்றைய உலகில் அனைத்து எலக்ட்ரானிக் சாதனங்களும் செமிகண்டக்டர்களை வைத்து உருவாக்கப்படும் மைக்ரோ சிப்களைப் பயன்படுத்தியே இயங்கி கொண்டிருக்கின்றன. ஸ்மார்ட்போன், டிவி, லேப்டாப் என அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களும் இயங்க தேவையான கட்டளைகள் இந்த சிப்களில்தான் பதிந்து வைக்கப்படுகின்றன. கார்களில் இருக்கும் இன்ஜின், ஹைட்லைட், டிரைவிங் அசிஸ்ட் ஆகியவற்றை கட்டுப்படுத்துவது, பாதுகாப்புக்கு தேவையான ஏர்பேக், ஏபிஎஸ் போன்ற பாதுகாப்பு வசதிகளை செயல்படுத்துவது என காரின் வெளிப்பக்கத்திலும் சரி, உட்புறத்திலும் சரி பல்வேறு பகுதிகளில் மைக்ரோ சிப்கள் பயன்படுத்தப்படுகின்றன.
எதிர்காலத்தில் செமிகண்டக்டர்கள் தேவை அதிகமாக இருக்கும் என்பதால், பல நிறுவனங்கள் செமிகண்டக்டர் உற்பத்தியில் களம் இறங்கி உள்ளன. டாடா குழுமமும் செமி கண்டக்டர் உற்பத்தி ஆலையை தொடங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அசாமில் ரூ.40,000 கோடி முதலீட்டில் செமிகண்டக்டர் தயாரிப்பு ஆலையை தொடங்க திட்டமிட்டுள்ளது.

அசாம் மாநிலத்தின் மிகப் பெரிய நகரமான கவுகாத்தியில் இருநத 55 கி.மீ. தொலைவில் மோரிகான் மாவட்டத்தில் உள்ள ஜாகிரோட்டில், செமி கண்டக்டர் ஆலையை தொடங்க டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது: எங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. டாடா எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஜாகிரோட்டில் ரூ.40,000 கோடி மதிப்பிலான எலக்ட்ரானிக் ஆலை அமைப்பதற்கான ஒரு திட்டத்தை மத்திய அரசிடம் சமர்பித்துள்ளனர்.
செமிகண்டக்டர் அசெம்பிள் மற்றும் பேக்கேஜிங் ஆலை அமைப்பது குறித்து டாடா குழும நிறுவனம் மாநில அரசுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இங்கு நடந்த விவாதங்களில் திருப்தி அடைந்த அவர்கள் (டாடா நிறுவனம்) மத்திய அரசை அணுகியுள்ளனர். எல்லாம் சரியாக நடந்தால், தொழில்மயமாக்கலுக்கு சாதகமான சூழலை உருவாக்கும் ஒரு பெரிய முதலீட்டை மாநிலத்தில் காண்போம். நாங்கள் மத்திய அரசுடன் தொடர்பில் உள்ளோம். மேலும் ஒரிரு மாதங்களில் டாடா திட்டத்துக்கு இறுதி ஒப்புதல் வழங்கப்படும் என்று நம்புகிறோம்.
இந்த ஆலையில் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மாநில அரசை டாடா குழுமம் அணுகியுள்ளது. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐ.டி. துறை ஏன் எங்கள் மாநிலத்துககு வரவில்லை எனறு நாங்கள் எப்போதும் கேட்போம். இப்போது அது மாறி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். கடந்த ஆகஸ்ட் மாதம், அசாம் செமிகண்டக்டர் உற்பத்தி மற்றும் மின்னணு உற்பத்தி கொள்கைக்கு அம்மாநில அரசு ஒப்புதல் அளித்தது. அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா எக்ஸில், மாநிலத்தை மாற்றுவதற்கான தொடர்ச்சியான வழிகாட்டுதலுக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications