டெஸ்லா உடன் முகேஷ் அம்பானி ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியான நிலையில், என்.சந்திரசேகரன் தலைமையிலான டாடா ஒப்பந்தமே கையெழுத்திட்டு உள்ளது என தகவல் வெளியானது. எனக்கே விபூதி அடிச்சிட்டில்ல மொமெண்ட் தான் இது.
உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் கார் உற்பத்தியாளர் டெஸ்லா நிறுவனம், உலகளவில் தனது செயல்பாடுகளை விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் ஒருபடியாகப் பல வருடப் போராட்டத்திற்குப் பின்பு இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதற்கான சூழ்நிலை உருவாக்கியுள்ளது.

இந்தியாவில் அமைக்கப்படும் தொழிற்சாலை ஏற்றுமதியை மையமாக வைத்து உருவாக்கப்படுவதால் டெஸ்லா தனது சப்ளை செயினை விரிவாக்கம் செய்ய வேண்டியது கட்டாயம், ஏற்கனவே இந்தியாவில் இருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உதிரிப்பாகங்களை டெஸ்லா வாங்கி வரும் வேளையில் அடுத்து முக்கியமான திட்டத்தை அறிவித்துள்ளது.
டெஸ்லா நிறுவனம் தற்போது கார் மட்டும் அல்லாமல் டிரக், ரோபோ, ஏஐ என பல துறையில் இயங்கி வரும் வேளையில் இதன் வளர்ச்சிக்கும் விரிவாக்கத்திற்கும் செமிகண்டக்டர் சிப் பெரும் தேவையாக இருக்கும் வேளையில், டெஸ்லா நிறுவனம் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் ஒரு மூலோபாய ஒப்பந்தத்தைச் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிஸ்டர் அம்பானி, இங்கேயும் வந்துட்டீங்களா.. வியந்த எலான் மஸ்க்.. தமிழ்நாடுக்கு வருகிறதா TESLA..?!
இதன் மூலம், இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியைத் தாண்டி, டெஸ்லா நிறுவனம் பல துறையில் முதலீடு செய்து தனது ஆப்ரேஷன்ஸ்-ஐ விரிவாக்கம் செய்யும், ஆப்பிள்-க்கு எப்படி இந்தியா முதுகெலும்பாகச் செயல்படுகிறதோ, அதேபோல் தற்போது டெஸ்லாவுக்கு பக்கபலமாக இருக்கப் போகிறது என தெரிகிறது.
சில மாதங்களுக்கு முன்பு டெஸ்லா - டாடா எலக்ட்ரானிக்ஸ் ரகசியமாகக் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், இந்தியாவில் தங்கள் செமிகண்டக்டர் துறையில் ஒரு முக்கிய பகுதியாக இருக்கும். மேலும் உலகளவில் முன்னணி வாடிக்கையாளர்களுக்கு டாடா எலக்ட்ரானிக்ஸ் ஒரு நம்பகமான சப்ளையர் என்பதை உறுதிப்படுத்துகிறது.
மின்சார வாகன உற்பத்தியில் உலகின் வேகமாக வளர்ந்து வரும் சந்தையான இந்தியாவில் நுழைய டெஸ்லா நிறுவனம் ஆர்வம் காட்டுகிறது. டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் இந்த மாதம் இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி-யை சந்திப்பதற்காக இந்தியாவுக்கு வர உள்ளதாகக் கூறப்படுகிறது.
எலக்ட்ரிக் வாகன உற்பத்தி ஆலைகளுக்கான நிதி ஒதுக்கீடு உட்பட, இந்தியாவில் முதலீடு செய்வதற்கான திட்டங்களை மஸ்க் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எலான் மஸ்க் இந்திய பயணத்தில் ஸ்டார்லிங்க் சேவைக்காக முகேஷ் அம்பானி உடனான பேச்சுவார்த்தை, செமிகண்டக்டர் சிப் உற்பத்திக்காக டாடா எலக்ட்ரானிக்ஸ் உடனான ஒப்பந்தம் ஆகியவை குறித்து உறுதியான தகவல் கிடைக்கும்.
டெஸ்லா நிறுவனம், சந்தை மதிப்பின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமாகும். டெஸ்லா - டாடா எலக்ட்ரானிக்ஸ் மத்தியிலான ஒப்பந்தம் இந்தியாவின் செமிகண்டக்டர் துறைக்கு பெரும் வளர்ச்சியைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மின்சார வாகன உற்பத்தியில் இந்தியா புதிய உயரத்தைத் தொடும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications