இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி நிறுவனங்களான டாடா குழும நிறுவனங்கள், அதன் ஊழியர்களுக்கு கொரோனாவுக்கு முந்தைய சம்பளத்தினை சேர்த்துள்ளதாகவும். அதோடு சம்பள உயர்வும் அளிக்க உள்ளதாகவும் அறித்துள்ளது.
கொரோனா காலத்தில் டாடா குழும நிறுவனங்கள் அதன் வருவாய் பாதிக்கப்பட்ட நிலையில், அதன் மூத்த அதிகாரிகளுக்கு 20 சதவீதம் சம்பளத்தினை குறைத்தது. ஆக அந்த சம்பளத்தினை தற்போது மீண்டும் சேர்த்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அதோடு சம்பள உயர்விற்கான அப்ரைசல் செயல்பாட்டினையும் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
குறைந்த சம்பளம் மீண்டும் சேர்ப்பு
குறிப்பாக டாடாவின் டாடா கேப்பிட்டல், டாடா கன்சியூமர், டைட்டன், டாடா மோட்டார்ஸ், டாடா பவர், டாடா ஸ்டீல், டாடா கெமிகல்ஸ், வோல்டாஸ், டிரெண்ட் உள்ளிட்ட ப்ளூசிப் நிறுவனங்கள் அதன் குறைத்த சம்பள விகிதத்தினை சேர்த்துள்ளதாக தெரிவித்துள்ளன. இது இந்தியாவின் பொருளாதாரம் தற்போது வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ள நிலையில் வந்துள்ளது.
அடுத்த மாதம் சம்பள உயர்வு
அதோடு சம்பள உயர்வு பற்றிய பேச்சு வார்த்தைகளும் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. சம்பளம் சேர்த்தலும் மார்ச் இறுதியில் சேர்க்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஹாஸ்பிட்டாலிட்டி துறையில் இந்த சம்பள உயர்வு இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது டாடாவின் ஹோட்டல் சங்கிலியான தாஜ் ஹோட்டல் தொடர்ந்து நஷ்டத்தினையே சந்தித்து வருகின்றது.
ஹாஸ்பிட்டாலிட்டி துறையில்?
ஏனெனில் இன்னும் சுற்றுலா துறையானது மீண்டு வரவில்லை. ஆனா;ல் அதே சமயம் செலவினங்கள் குறையவில்லை. குறிப்பாக மின்சாரம், பாதுகாப்பு, உணவு என பல செலவுகளும் உள்ளன. கடந்த வாரத்தில் தான் இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப சேவை நிறுவனமான டிசிஎஸ் ஏப்ர்ல் 1 முதல் அதன் 4.7 லட்சம் பணியாளர்களுக்கு சம்பள உயர்வை அறிவித்துள்ளது.
டிசிஎஸ்ஸின் பிரம்மாண்ட அறிவிப்பு
ஏற்கனவே நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டின் இறுதியில் அக்டோபர் 1 முதல் நிறுவனம் சம்பள உயர்வை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. டிசிஎஸ் சராசரியாக சம்பள உயர்வு என்பதை 6 - 8% கொடுக்கும் நிலையில், இந்த முறை 12 - 14% கொடுக்கலாம் என தெரிகிறது. அதோடு பதவி உயர்வும் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications