சமீபத்திய காலமாக டாடா ப்ளே மற்றும் டாடா டெக்னாலஜி நிறுவனங்களுக்கான ஐபிஓ-க்கள் திட்டமிடப்பட்டு வருவதாக வதந்திகள் வெளியாகின.
டாடா குழுமத்தினை சேர்ந்த 29 நிறுவனங்கள் பொது பங்கு வெளியீட்டினை செய்துள்ளன. இதன் மதிப்பு 23.4 டிரில்லியன் ரூபாயாகும்.
உப்பு முதல் ஸ்டீல் வரையில் உள்ள கூட்டு நிறுவனமான டாடா குழுமத்தில் சத்தமே இல்லாமல் ஒரு நிறுவனம், ஐபிஓவுக்கு தயாராகி இருக்கலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
டாடா எலக்ட்ரானிக்ஸ்
இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் துறையானது 2025ம் ஆண்டளவில் 300 பில்லியன் டாலர்கள் வளர்ச்சியினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் டாடா குழுமத்தின் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் பங்கு சந்தையில் நுழையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனங்களில் ஒன்றாகும். தமிழ் நாட்டில் ஒசூர் அருகில் இதற்கான ஆலையை அமைத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
1 ட்ரில்லியன் டாலர்
டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சமீபத்திய காலமாகவே முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து வரும் ஒரு நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகின்றது. ஒது 2030ம் ஆண்டில் 1 ட்ரில்லியன் டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. செமிகண்டக்டர் வணிகத்தில் இறங்குவதற்கான நிறுவனத்தின் வளர்ச்சியினை உறுதிபடுத்துகிறார்.
வருவாய் எதிர்பார்ப்பு
டாடா குழுமம் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பதற்காகக் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஒசூர் அருகே, முதலீட்டில் தொழிற்சாலையை அமைத்து வருகிறது. இந்த தொழிற்துறை சார்ந்த வருவாய் விகிதமானது 75 - 80% வரையில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேலை வாய்ப்பு கிடைக்கும்
சமீபத்தில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து, ஆப்பிள் ஐபோன் உதிரி பாகங்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இது பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பினை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பினை கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா குழுமத்துடன் பேச்சு வார்த்தை
டாடாவின் இந்த முயற்சிக்கு மத்தியில் சமீபத்தில், டாடா விஸ்ட்ரான் உடன் இணைந்து ஆப்பிள் ஐபோன்கள் உற்பத்தி செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதற்காக டாடா குழுமம் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications