டாடா குழுமம் இதுநாள் வரையில் கிருஷ்ணகிரி தொழிற்சாலையில் ஐபோனுக்கான சில முக்கிய உதிரிபாகங்களை மட்டுமே தயாரித்து வந்த நிலையில் முதல் முறையாக ஐபோன்களை அசம்பிளி செய்து சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்யும் முக்கியமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது.
இந்தியாவில் ஐபோன் அசம்பிளி செய்ய இதுவரையில் டாடா எவ்விதமான தொழிற்சாலையும் அமைக்கவில்லை, ஆனால் சில மாதங்களுக்கு முன்பு டாடா குரூப் பெங்களூரில் இருக்கும் விஸ்திரான் ஐபோன் அசம்பிளி தொழிற்சாலையை கைப்பற்ற பேச்சுவார்த்தை நடத்தியதில் தற்போது வெற்றி அடைந்துள்ளது.

டாடா குரூப், பெங்களூரில் இருக்கும் விஸ்திரான் தொழிற்சாலையை கைப்பற்றுவதன் மூலம், ஐபோன் தயாரிக்கும் முதல் இந்திய நிறுவனம் என்ற புதிய சரித்திரத்தை படைக்க உள்ளது டாடா குரூப். என்.சந்திரசேககரன் தலைமையிலான டாடா சன்ஸ் புதிய துறையில் இறங்குவது மட்டும் அல்லாமல் டாடா குழுமத்தின் வேகத்தை பெரிய அளவில் உயர்த்தியுள்ளது.
பெங்களூரில் இருக்கும் விஸ்திரான் தொழிற்சாலையில் தற்போது ஐபோன் 14 மாடல் அசம்பிளி செய்யப்பட்டு வருகிறது, இத்தொழிற்சாலையில் 10000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். மார்ச் 2024க்குள் சுமார் 1.8 பில்லியன் டாலருக்கும் அதிக மதிப்புடைய ஐபோன்களை தயாரிக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இது மட்டும் அல்லாமல் அடுத்த வருடத்திற்குள் ஊழியர்கள் எண்ணிக்கையை 3 மடங்கு அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
பெங்களூரில் விஸ்திரான் தொழிற்சாலை டாடா குழுமத்திற்கு விற்பனை செய்வது மூலம் விஸ்திரான் இந்தியாவை விட்டு மொத்தமாக வெளியேறுகிறது. இதன் மூலம் இந்தியாவில் இருக்கும் ஆப்பிள் நிறுவன சப்ளையர்கள் பட்டியலில் பாக்ஸ்கான், பெகாட்ரன் உடன் டாடா குழுமம் சேர உள்ளது.
டாடா எலக்ட்ரானிக்ஸ் ஏற்கனவே கிருஷ்ணகிரியில் ஐபோனுக்கான உதிரிபாகங்களை தயாரித்து வரும் வேளையில் தற்போது ஐபோன் அசம்பிளி பணிகளில் இறங்க உள்ளது. இதன் மூலம் ஆப்பிள் உடனான கூட்டணியை டாடா பெரிய அளவில் மேம்படுத்தியுள்ளது. டாடா குரூப் - விஸ்திரான் மத்தியிலான ஒப்பந்தம் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடியும் என எதர்பார்க்கப்படுகிறது.
பெங்களூர் விஸ்திரான் தொழிற்சாலை 600 மில்லியன் டாலர் என மதிப்பிடப்படும் வேளையில், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் விஸ்திரான் 500 மில்லியன் டாலர் மதிப்பிலான போன்களை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
155 வருட பழமையான டாடா குழுமம் உப்பு முதல் டெக் வரையில் பல பொருட்களையும், சேவைகளையும் அளித்து வரும் வேளையில், கடந்த சில வருடங்களாக குறிப்பாக சந்திரசேகரன் தலைமையிலான டாடா குழுமம் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி, ஈகாமர்ஸ், செமிகண்டக்டர் என பல துறைகளில் புதிதாக இறங்கி வருகிறது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications