டாடாவின் செம திட்டம்.. பிக்பாஸ்கெட்டுடன் கூட்டணி சேர திட்டம்.. இகாமர்ஸ்களுக்கு செம ட்விஸ்ட்..!

இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான டாடா குழும நிறுவனம், ஆன்லைன் இ-காமர்ஸ் சந்தையில் இறங்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் சமீபத்தில் தனது ஆன்லைன் டிஜிட்டல் வணிகத்தினை தொடங்க, பல முதலீட்டாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிக்பாஸ்கெட் நிறுவனத்துடன், டாடா குழுமம் கூட்டணி சேரலாம் என்று பிசினஸ் டுடே கூறியுள்ளது.

சர்வதேச நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை

சர்வதேச நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை

ஏற்கனவே டாடா குழுமம் பல சர்வதேச நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக https://tamil.goodreturns.in/news/walmart-may-invest-up-to-25-billion-in-tata-group-020765.html என்ற கட்டுரையில் படித்தோம். இந்த நிலையில் டாடா குழுமம் வளர்ந்து வரும் ஆன்லைன் மளிகை சந்தையை கைப்பற்றுவதற்கான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளது.

பிக்பாஸ்கெட்டுடன் கூட்டணி சேர திட்டம்

பிக்பாஸ்கெட்டுடன் கூட்டணி சேர திட்டம்

முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் குழுமம் ஜியோமார்ட் என்ற பெயரில் சமீபத்தில் தான், இ-காமர்ஸ் சந்தையில் நுழைந்தது. இந்த நிலையில் தற்போது டாடா குழுமம் இ-காமர்ஸ் சந்தையில் நுழைய திட்டமிட்டு வருகின்றது. இந்த நிலையில் தான் சிறந்த யூனிகார்ன் நிறுவனமான பிக்பாஸ்கெட்டுடன் கூட்டணி சேர டாடா குழுமம் திட்டமிட்டு வருகின்றது.

சர்வதேச முதலீடுகளுக்கு திட்டம்

சர்வதேச முதலீடுகளுக்கு திட்டம்

அதோடு முதலீட்டாளர்களிடம் இருந்து 200 மில்லியன் டாலர்களை திரட்டவும் திட்டமிட்டுள்ளது. டாடாவைத் தவிர சிங்கப்பூரின் டெமாசெக் ஹோல்டிங்ஸ் மற்றும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஜெனரேஷன் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் இந்த முதலீட்டு பங்களிப்பில் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ்கெட்டின் பெரிய திட்டம்

பிக்பாஸ்கெட்டின் பெரிய திட்டம்

பிக்பாஸ்கெட் நிறுவனம் தனது ஸ்டார்டப் நிறுவனத்தினை இந்தியா முழுவதும் விரிவுபடுத்த திட்டமிட்டு வருவதாக கூறியது. இதற்கிடையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பொதுபங்கு வெளியீடு செய்யவும் திட்டமிட்டு வருவதாகவும் கூறியிருந்தது. ஆக டாடாவின் இந்த திட்டம் பிக்பாஸ்கெட்டுக்கு பெரும் அளவு கைக்கொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும் போட்டியாளராக மாறலாம்

பெரும் போட்டியாளராக மாறலாம்

டாடா குழுமம் ஏற்கனவே எஃப்எம்சிஜி சில்லறை வர்த்தகம், டாடா CLiQ, என பல வர்த்தகத்தில் கொடிகட்டி பறந்து வருகிறது. இந்த நிலையில் டாடாவின் ஆன்லைன் வர்த்தகங்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஜியோமார்ட்டுக்கு நிச்சயம் ஒரு போட்டியாளராக மாறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+