இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஒவ்வொரு வருடமும் புதிய உச்சத்தை எலக்ட்ரிக் கார் பிரிவில் அடைந்து வரும் டாடா மோட்டார்ஸ், அடுத்தக்கட்ட வளர்ச்சி பாதையை அமைக்க முடிவு செய்துள்ளது. டாடா மோட்டார்ஸ் 2.0 அதாவது சந்திரசேகரன் தலைமையில், ஜாகுவார் லேண்ட்ரோவர் உதவிகள் உடன் அறிமுகம் செய்த புதிய கார்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி.
எலக்ட்ரிக் வாகன பிரிவில் டாடா மோட்டார்ஸ் பிற ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வருவதற்கு முன்பே இறங்கியதாலும், டாடா கார்களின் தரம் மற்றும் பர்மாமென்ஸ் பெரிய அளவில் முன்னேறியுள்ளதால் அதிகப்படியான வர்த்தகத்தை பதிவு செய்து வருகிறது.

இந்த நிலையில் எலக்ட்ரிக் கார்களின் வர்த்தகத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும முயற்சியுடன் டாடா குழுமம் தனது எலக்ட்ரிக் வாகன சப்ளை செயின்-ஐ விரிவாக்கவும் மேம்படுத்தவும் முக்கிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
டாடா குரூப் சுமார் 13000 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய லித்தியம்-அயன் பேட்டரி தொழிற்சாலையை உருவாக்குவதற்கான முக்கிய ஒப்பந்தத்தில் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டு அசத்தியுள்ளது. இந்த ஒப்பந்தம் இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தாலும் சக போட்டி நிறுவனங்களுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
டாடா குழுமத்தின் கிளை நிறுவனமான அக்ரடாஸ் எனர்ஜி ஸ்டோரேஜ் சொல்யூஷன்ஸ் (Agratas Energy Storage Solutions) மற்றும் குஜராத் மாநில அரசு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் டாடா குழுமம் குஜராத் மாநில சனந் பகுதியில் 13000 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய லித்தியம்-அயன் பேட்டரி தொழிற்சாலையை உருவாக்கப்பட உள்ளது.
இந்த ஒப்பந்தம் முடிக்கப்பட்ட நிலையில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இந்த தொழிற்சாலை கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொழிற்சாலை முதல்கட்டமாக 20 ஜிகாவாட் உற்பத்தித் திறனைக் கொண்டிருக்கும், இது இரண்டாம் கட்ட விரிவாக்கத்தில் இரட்டிப்பாகும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்திய மக்கள் தொகை மற்றும் எலக்ட்ரிக் கார்களின் தயாரிப்பு எண்ணிக்கையை ஒப்பிடுகையில் இந்தியாவின் கார் சந்தை மிகவும் சிறியதாக உள்ளது. அப்படியானால் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன சந்தையில் அதிகப்படியான வாய்ப்புகள் குவிந்துக்கிடக்கிறது. இதன் வாயிலாக பல வருடங்களுக்கு முன்பே இதை உணர்ந்து டாடா மோட்டார்ஸ் அதன் EV வர்த்தகத்தை வலுப்படுத்தியது.
டாடா மோட்டார்ஸ் இந்தியா எலக்ட்ரிக் வாகன விற்பனை சந்தையில் ஆதிக்கம் செலுத்தினாலும், ஒட்டுமொத்த கார் விற்பனையில் டாடா எலக்ட்ரிக் கார் விற்பனை என்பது மிகவும் சிறியது. கடந்த ஆண்டு இந்தியாவின் மொத்த கார் விற்பனை எண்ணிக்கை 38 லட்சம், இதில் வெறும் 1% மட்டுமே டாடா எலக்ட்ரிக் கார் விற்பனை.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications