இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனங்களான டாடா குழுமம் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மும்பையில் பிரீமியம் ரீடைல் ரியல் எஸ்டேட் இடங்களைத் தேடி தேடி வாங்கப் போட்டியிடுகின்றன. வர்த்தகத்தில் போட்டிப்போடுவதைத் தாண்டி தற்போது நிலம், கட்டிடம் வாங்குவதில் பெரும் போட்டி நிலவி வருகிறது.
இந்தியாவின் பெரும் வர்த்தகச் சாம்ராஜ்ஜியங்கள் கொரோனாவுக்கு முன்பு வரையில் மொத்த விற்பனையில் மட்டுமே டார்கெட் செய்யப்பட்டு வந்த நிலையில், சமீப காலமாக ரீடைல் வர்த்தகத்தில் அதிகப்படியாகக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

இதிலும் குறிப்பாக டாடா குழுமத்தின் டாடா கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ரிலையன்ஸ் ரீடைல் அனைத்து பிரிவுகளிலும் நுழைந்து வருகிறது. மளிகை பொருட்கள் துவங்கி ஆடை, சாக்லேட், குளிர்பானம், உணவு வகைகள், ஸ்னாக்ஸ் வரையில் மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ஜாரா மற்றும் ஸ்டார்பக்ஸ் முதல் வெஸ்ட்சைட் மற்றும் டைட்டன் வரை, டாடா குழுமம் இந்தியாவில் கிட்டத்தட்ட 25 மில்லியன் சதுர அடி பரப்பளவில் ரீடைல் விற்பனை தளத்தைக் கொண்டு உள்ளது.
100க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் உலகளாவிய பிராண்டுகளுக்கு 73 மில்லியன் சதுர அடியில் மூன்று மடங்கு அதிகமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரீடைல் விற்பனை தளத்தை வைத்துள்ளது.
ஆனால் நாட்டின் நிதியியல் தலைநகரமும், முக்கியமான வர்த்தகச் சந்தையாக இருக்கும் மும்பை-யில் ரிலையன்ஸ் மற்றும் டாடா குழுமம் கிட்டத்தட்ட 3 மில்லியன் சதுர அடி ரீடைல் விற்பனை தளத்தைச் சமமாகக் கொண்டு உள்ளது.
இந்த நிலையில் தற்போது இரு நிறுவனங்களும் மும்பையில் தனது ரீடைல் விற்பனை கடைகளை அதிகரிக்கத் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இதில் குறிப்பாக மும்பையில் முக்கியமான பகுதியில் ப்ரீமியம் ரீடைல் விற்பனை சொத்துக்களை வாங்குவதில் பெரும் போட்டியிட்டு வருகிறது.
ஏற்கனவே கமர்சியல் ரியல் எஸ்டேட் துறைக்குப் பெயர்போன மும்பையில் தற்போது டாடா குழுமம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போட்டிப்போட்டு ரீடைல் வர்த்தகம் செய்யும் இடத்தை வாங்குவது மூலம் ரியல் எஸ்டேட் துறைக்கு ராஜயோகம் அடித்துள்ளது.
டாடா குழுமம் 1980களின் பிற்பகுதியில் சில்லறை விற்பனையில் நுழைந்தது, டைட்டன் வாட்ச் ஸ்டோர்களைத் திறந்து 10 வருடத்திற்குப் பிறகு வெஸ்ட்சைட் என்ற ரீடைல் பிராண்ட் கடைகளைத் துவங்கியது.
இதுவரை டாடா குழுமம் தனிஷ்க், ஸ்டார்பக்ஸ், வெஸ்ட்சைட், ஜூடியோ, ஜாரா மற்றும் குரோமா போன்ற பிராண்டுகள் உட்படச் சுமார் 4,600 கடைகள் இந்தியா முழுவதும் டாடா கொண்டு உள்ளது
ரிலையன்ஸ் ரீடெய்ல் 2006 இல் தொடங்கப்பட்டபோது, அதன் தாமதமான நுழைவுக்கு ஈடுகொடுக்க, பல்வேறு வடிவங்களில் கடைகளைத் அதிகளவில் திறந்தது. ரிலையன்ஸ் சூப்பர்மார்கெட்ஸ், எலக்ட்ரானிக்ஸ், நகைகள் மற்றும் ஆடைகள் என மொத்தம் 18,774 கடைகளைக் கொண்டுள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications