இந்தியாவின் மாபெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியமாக இருக்கும் டாடா குழுமம் அடுத்தடுத்து பல வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வரும் வேளையில், சமீபத்தில் தனது எலக்ட்ரிக் வாகன உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் புதிய முதலீடுகளையும், புதிய தொழிற்சாலைகளையும் அமைக்க டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் தலைமையிலான நிர்வாகம் முடிவு செய்தது.
இதில் அனைத்து தரப்பினராலும் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது டாடா குழுமம் அமைக்க இருந்த எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலை தான். இதற்காக டாடா குழுமம் தனியாக ஒரு தலைவரை நியமனம் செய்து, தனி குழுவை டாடா மோட்டார்ஸ் கீழ் அமைத்தது.

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பும், விற்பனையும் முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் வேளையில் உள்நாட்டிலேயே மின்கலத்தைத் தயாரிக்கும் பட்சத்தில் பெரிய அளவிலான விலை மாற்றத்தை எலக்ட்ரிக் வாகனங்களில் பார்க்க முடியும் என அனைவரும் நம்பினர்.
இந்த தொழிற்சாலை ஓசூரில் வருமா, மணப்பாறையில் வருமா என பல கணிப்புகள் இதற்கு முன்பு வெளியானது. இப்படியிருக்கும் வேளையில் டாடா குழுமம் தனது புதிய பேட்டரி தொழிற்சாலையைப் பிரிட்டன் நாட்டில் அமைக்கத் திட்டமிட்டு உள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
பன்னாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்களின் கடுமையான போட்டியில் பிரிட்டன் நாட்டின் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மிகவும் மோசமாக இருக்கும் வேளையில் டாடாவின் இந்த முடிவு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
டாடா குழுமம் தனது புதிய EV பேட்டரி தொழிற்சாலையைத் தென்மேற்கு இங்கிலாந்து பகுதியான Somerset-ல் அமைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது, இங்கு தயாரிக்கப்படும் பேட்டரிகள் டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் வாகனங்களுக்கு சப்ளை செய்யப்பட உள்ளது, இதற்கான இறுதி முடிவை டாடா குழும நிர்வாகம் இந்த வார இறுதிக்குள் எடுக்கும் எனவும் ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
டாடா குழுமம் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் வாகனங்களுக்கான பேட்டரியை தயாரிக்கும் தொழிற்சாலையைப் பிரிட்டன் நாட்டில் அமைக்கலாமா அல்லது ஸ்பெயின் நாட்டில் அமைக்கலாமா என பல மாதங்களாக ஆலோசனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த தொழிற்சாலை டாடா குழுமத்திற்கு மட்டும் அல்லாமல் பிரிட்டன் நாட்டின் ஆட்டோமொபைல் துறைக்கும், பிரிட்டன் பொருளாதாரத்திற்கும் ஜாக்பாட் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடாவின் இப்புதிய பேட்டரி தொழிற்சாலை மூலம் பிரிட்டன் நாட்டில் இருக்கும் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கான பேட்டரி சப்ளை வர்த்தகத்தை மொத்தமாகப் பெற முடியும்.
மேலும் 2024 முதல் பிரெக்சிட் காரணமாக UK-EU மத்தியிலான வர்த்தகத்திற்குக் கூடுதல் வரி விதிக்கப்பட உள்ளது, இதைத் தவிர்க்கவேண்டுமெனில் அதிகப்படியான பொருட்களை உள் நாட்டில் தயாரிக்க வேண்டும்.
இந்த வாய்ப்பை தற்போது டாடா கைப்பற்ற உள்ளது, இதன் மூலம் பிரிட்டன் பேட்டரி தொழிற்சாலைக்கும் இந்திய வர்த்தகத்திற்கும் எவ்விதமான பாதிப்பு இருக்காது என கணிக்கப்படுகிறது. மேலும் டாடா குழுமம் இந்திய வர்த்தகத்திற்காகப் பிரிட்டன் பேட்டரி தொழிற்சாலை அனுபவத்தை அடிப்படையாக வைத்து தனியாக ஒரு EV பேட்டரி தொழிற்சாலை அமைக்க வாய்ப்பு உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications