இந்தியாவின் முன்னணி வர்த்தக சாம்ராஜ்ஜியமான டாடா குழுமம் இந்தியாவின் வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல முக்கியமான திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. இதன் ஒருபகுதியாக தற்போது ரூ.27000 கோடி முதலீடு, 170 ஏக்கர் பிரம்மாண்ட திட்டத்தை 2025 ஆம் ஆண்டுக்குள் முடிக்கும் இலக்கை கொண்டு அதிரடியாகச் செயல்படத் துவங்கியுள்ளது.
டாடா குழுமம் பல புதிய துறையில் இறங்க முக்கியமாகத் தேர்வு செய்த இடம் என்றால் அது தமிழ்நாடு தான், இதில் குறிப்பாக எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி, சோலார், ஐடி என பல துறைக்கு தமிழ்நாடு டாடா குழுமத்திற்கு முக்கிய தேர்வாக உள்ளது. இந்த நிலையில் டாடா குழுமத்தின் எதிர்காலத்தை மாற்றப்போகும் செமிகண்டக்டர் துறைக்கு அசாம் மாநிலத்தைத் தேர்வு செய்துள்ளது.

மத்திய அரசின் மாபெரும் PLI திட்டத்தின் கீழ் டாடா குழுமம் ஒப்புதல் பெற்றதைத் தொடர்ந்து அசாம் மாநிலத்தில் ஒரு பெரும் செமிகண்டக்டர் தொழிற்சாலையை அமைக்க உள்ளது. அசாம் மாநில அரசுக்கும் டாடா குழுமத்திற்கும் இடையே ஒரு முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது.
அசாம் மாநிலத்தில் மொரிகாங் (Morigaon) மாவட்டத்தில் Jadirod என்னும் பகுதியில் சுமார் 170 ஏக்கர் நிலம் 60 ஆண்டுகளுக்கு அசாம் அரசு டாடா குழுமத்திற்கு குத்தகைக்கு விடப்பட உள்ளது. இங்குதான் ரூ.27,000 கோடி மதிப்பிலான அதிநவீன சிலிக்கான் சிப் உற்பத்தி ஆலை அமைய உள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் அசாம் மாநிலம் தொழில்நுட்பத் துறையில் ஒரு முன்னணி மாநிலமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாகும். குறிப்பாக இளைஞர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். டாடா குழுமத்தின் சார்பில் ஒரு மூத்த நிர்வாகியும், அசாம் அரசின் சார்பில் தொழில் வளர்ச்சி கழகத்தின் ஒரு தொழில்நுட்ப மேலாளரும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
அசாம் முதல்வர் கூறுகையில், இந்த சிலிக்கான் சிப் உற்பத்தி தொழிற்சாலை 2025-ஆம் ஆண்டுக்குள் உற்பத்தியைத் தொடங்கும் என்றும், இதே இடத்தில் திறன் மேம்பாட்டு மையமும் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த திறன் மேம்பாட்டு மையம் வாயிலாக அசாம் மாநில இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு, சிலிக்கான் சிப் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகளில் பயிற்சி அளிக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 1500 பெண்களுக்கு தற்போது தென்னிந்தியாவில் உள்ள பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்று வருவதாகவும், அவர்கள் இந்த ஆலையில் முக்கிய பதவிகளை ஏற்கும் வகையில் தயார்ப்படுத்தப்பட்டு வருவதாகவும் அசாம் மாநில முதல்வர் தெரிவித்தார். இந்த திட்டம் அசாம் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் ஒரு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications