பிக்பேஸ்கட்-க்கு ஜாக்பாட்.. 1 பில்லியன் டாலர் முதலீட்டுக்கு டாடா பேச்சுவார்த்தை..!

இந்தியாவில் வேகமாக வளர்ந்து இந்திய ரீடைல் சந்தையில் அமேசான், பிளிப்கார்ட், ஜியோமார்ட் ஆகிய நிறுவனங்கள் கடுமையாகப் போட்டி போட்டு வரும் நிலையில், டாடாவும் டிஜிட்டல் ஈகாமர்ஸ் வர்த்தகத்திற்கு இறங்குவதற்கான முயற்சிகளைச் செய்து வருகிறது.

டாடா-வின் வருகை முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய போட்டியாக இருந்தாலும், டாடாவின் வருகைக்கு முன்பு அனைத்து நிறுவனங்களும் ஆதிக்கம் செலுத்த வேண்டும் எனக் கடுமையாகத் திட்டமிட்டு வருகிறது.

இந்நிலையில் டாடா குழுமம் தனது டிஜிட்டல் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதற்காக இத்துறையின் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் விற்பனையில் சிறந்து விளங்கும் பிக்பேஸ்கட் நிறுவனத்தில் சுமார் 1 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைச் செய்யப் பேச்சுவார்த்தை வருகிறது டாடா.

டாடா -வின் இந்த முயற்சி இந்திய ஈகாமர்ஸ் மற்றும் டிஜிட்டல் வர்த்தகச் சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தைச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர் ஆப்

சூப்பர் ஆப்

அமேசான் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போது இந்திய மக்களுக்கு ஓரே தளத்தில் பல்வேறு டிஜிட்டல் சேவைகளை அளிக்கும் வகையில் சூப்பர் ஆப்-ஐ இரு நிறுவனங்களும் போட்டிப்போட்டுத் தனிதனியாக உருவாக்கி வருகிறது.

இந்நிலையில் டாடா குழுமம் தனது டிஜிட்டல் வர்த்தகத்தை உருவாக்குவதற்கு முன்பாகவே சூப்பர் ஆப்-க்கான பணிகளைத் துவங்கி அமேசான் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-க்கு முன்னோடியாக உள்ளது.

 

பிக்பேஸ்கட்

பிக்பேஸ்கட்

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இந்தியாவின் பல நகரங்களில் வர்த்தகம் செய்து வரும் பிக்பேஸ்கட் தற்போது பிளிப்கார்ட் மற்றும் அமேசானின் பிரஷ் வர்த்தகத்திற்கு மிகப்பெரிய போட்டியாக உள்ளது. இவ்விரு நிறுவனங்களின் வருகைக்குப் பின்பு பிக்பேஸ்கட் வாடிக்கையாளர் எண்ணிக்கை மற்றும் வர்த்தகத்தில் சிறப்பான வளர்ச்சியைக் கண்டு வருகிறது.

ஆனால் ஜியோ மார்ட் வருகைக்குப் பின்பு கணிசமான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது பிக்பேஸ்கட்

 

முதலீடு

முதலீடு

இந்த மாபெரும் டிஜிட்டல் வர்த்தகத் தளமாக இருக்கும் பிக்பேஸ்கட் நிறுவனத்தின், நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கு டாடா குழுமம் பங்குகளை வாங்குவதற்காகச் சுமார் 1 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை செய்யப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஆனால் இந்தப் பேச்சுவார்த்தை ரகசியமாக நடைபெறுவதால், இரு நிறுவனங்களும் எவ்விதமான தகவல்களை வெளியிடவில்லை.

 

அலிபாபா

அலிபாபா

இந்நிலையில் பிக்பேஸ்கட் நிறுவனத்தில் சீனாவின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் நிறுவனமாக விளங்கும் அலிபாபா சுமார் 26 சதவீத பங்குகளை வைத்துள்ளது.

டாடாவின் வருகையும், இந்தியாவில் சீன முதலீடுகள் மீது இருக்கும் பிரச்சனைகள் மத்தியில் அலிபாபாவின் 26 சதவீத பங்குகளையும் டாடா வாங்க அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+