மும்பை: டாடா குழுமத்திற்கு சொந்தமான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகள் கடந்த 5 ஆண்டுகளில் 470 சதவிகிதம் லாபம் பெற்று தந்துள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த வளர்ச்சி நீடிக்குமா, தரகு நிறுவனங்கள் கூறுவது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
டாடா மோட்டார்ஸ்: டாடா குழுமத்தின் ஒரு பகுதியான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. கார், லாரி, வேன் மற்றும் பேருந்துகள் தயாரிப்பில் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதன் துணை நிறுவனங்களில் பிரிட்டிஷ் ஜாக்குவார் லேண்ட் ரோவர் மற்றும் தென் கொரிய டாடா டேவோவும் அடங்கும். டாடா மோட்டார்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு கடந்த 12 மாதங்களில் 110 சதவீதம் அதிகரித்துள்ளது.

5 ஆண்டுகளில் 470% லாபம்: கடந்த ஐந்து ஆண்டுகள் என கணக்கிட்டு பார்த்தால் டாடா மோட்டார்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலையானது 470% உயர்ந்துள்ளது. அதாவது 5 ஆண்டுகளுக்கு முன்பு 167 ரூபாயாக இருந்த ஒரு பங்கின் விலையானது தற்போது 930 ரூபாய் என உயர்ந்துள்ளது. எனவே நீண்ட காலம் இந்த பங்கினை தங்க வைத்திருக்கும் முதலீட்டாளர்கள் நல்ல லாபத்தை பெற்றுள்ளனர். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் முந்தைய நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 88,480 கோடி ரூபாயாக இருந்த நிலையில் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 1,10,577 கோடி ரூபாய் என உயர்ந்துள்ளது.
டாடா நிறுவன மதிப்பு: நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 3 .39 கோடி ரூபாயாக உள்ளது. நிறுவன பங்குகளில் 46.37 சதவிகிதம் புரமோட்டர்கள் வசம் உள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள் 18.62 சதவிகித பங்குகளையும், சில்லறை முதலீட்டாளர்கள்18.62 சதவிகித பங்குகளையும் கொண்டுள்ளனர். பரஸ்பர நிதி நிறுவனங்கள் 10.37 சதவிகித பங்குகளையும், உள்நாட்டு நிறுவனங்கள் 6.02 சதவிகித பங்குகளையும் வைத்துள்ளன.
பங்கு விலை: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு முதல் வேகமான வளர்ச்சியை காட்டி வருகிறது என, ஏஞ்சல் ஒன் நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் ஓஷோ கிருஷ்ணன் கூறியுள்ளார். பங்கின் விலை 1000 ரூபாய் வரை எட்ட வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறார் அவர். புதிய மின்சார வாகனங்களின் விற்பனையை பொறுத்து இந்த ஆண்டில் டாடா மோட்டார்ஸின் வளர்ச்சி அமையும் என நோமுரா இந்தியா கணிப்பு வெளியிட்டுள்ளது.

அதே நேரம், ஜாக்குவார் லேண்ட் ரோவர் வாகனத்தின் விற்பனையை பொறுத்து நிறுவனத்தின் வளர்ச்சியும் , பங்கின் போக்கும் இருக்கும் என மோதிலால் ஓஸ்வால் கணித்துள்ளது.
கடன்களை குறைக்கும் நடவடிக்கைகளை டாடா மோட்டார்ஸ் தீவிரப்படுத்தி இருப்பதும் கவனிக்க வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளது. உள்நாட்டில் டாடா மோட்டார்ஸின் மின்சார வாகனங்கள் சந்தையில் முன்னணி வகிக்கின்றன என்பதால் டாடா மோட்டார்ஸ் பங்கின் விலை 1,010 ரூபாய் என உயரும் எனவும் தரகு நிறுவனங்கள் கருதுகின்றன.
Article written by: Devika
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications