டாடா பவர் நிறுவனம் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் செப்டம்பர் காலாண்டில் 85% அதிகரித்து, 935.18 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
நிறுவனம் தொடர்ந்து வலுவான வருவாய் விகிதத்தினை பதிவு செய்துள்ள நிலையில், அதன் நிகரலாபமும் அதிகரித்துள்ளது.
கடந்த நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபமானது 505.66 கோடி ரூபாயாக இருந்ததாக பி எஸ் இ-க்கு தாக்கல் செய்த அறிக்கையில் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மொத்த வருவாய் விகிதம்
இந்த நிறுவனத்தின் மொத்த வருவாய் விகிதமானது 39% அதிகரித்து, 14,181.07 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 10,187.33 கோடி ரூபாயாக இருந்தது. இதற்கிடையில் ஒருங்கிணைந்த எபிட்டா விகிதம் செப்டம்பர் காலாண்டில் 18% அதிகரித்து, 2043 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 1732 கோடி ரூபாயாக இருந்தது.
வரிக்கு பிந்தைய லாபம்
தொடர்ந்து அதன் செயல்பாட்டினை அதிகரித்து வரும் நிலையில், புதுபிக்கதக்க ஆற்றல் துறையிலும் அதன் வளர்ச்சி விகிதத்தினை அதிகரித்துள்ளது.
டாடா பவரின் வரிக்கு பிந்தைய நிகர லாபம் தொடர்ந்து 12வது காலாண்டாக அதிகரித்துள்ளது. இது அதன் வணிக யுக்தியினை மேம்படுத்தி வரும் நிலையில், அதன் வளர்ச்சி விகிதமானது தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகின்றது.
மேம்படுத்தப்பட்ட செயல்பாடு
இந்த நிறுவனம் அதன் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி கண்டு வருகின்றது. குறிப்பாக உருவாக்கம், டிரான்ஸ்மிஷன், சப்ளை, புதுபிக்கதக்க ஆற்றல் உள்பட பல துறைகளிலும் செயல்திறன் மேம்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தொடர்ந்து 12வது காலாண்டாக பி ஏடி அதிகரித்திருப்பது, எங்களது வலுவான அடிப்படை கட்டமைப்பினை காட்டுகின்றது என டாடா பவரின் தலைமை செயல் அதிகாரியான பிரவீர் சின்ஹா தெரிவித்துள்ளார்.
இன்றைய பங்கு விலை நிலவரம்?
என்.எஸ்.இ-யில் டாடா பவர் பங்கின் விலையானது முடிவில், 0.35% குறைந்து, 225.05 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் உச்ச விலை 227.70 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 222.55 ரூபாயாகவும் உள்ளது.
இதே பி.எஸ்.இ-யில் இதன் பங்கு விலையானது 0.40% குறைந்து, 225 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 227.40 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 222.50 ரூபாயாகவும் உள்ளது.இதன் 52 வார உச்ச விலை 298 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்த விலை 190 ரூபாயாகவும் உள்ளது.


Click it and Unblock the Notifications