இந்தியாவின் முன்னணி மின்சார துறை நிறுவனமான டாடா பவர், தமிழ்நாட்டில் சோலார் செல் உற்பத்தி ஆலையை அமைக்கவும், இதற்கான கட்டுமான பணிகளை விரைவில் துவங்கவும் அமெரிக்க அரசு அமைப்பிடம் இருந்து 400 மில்லியன் டாலர் நிதியுதவி பெற உள்ளது. டாடா குழுமம் அடுத்தடுத்து பல முதலீடுகளை செய்து வரும் வேளையில் இந்த சோலார் செல் உற்பத்தி ஆலை திருநெல்வேலி மாவட்டத்தில் விரைவில் அமைக்கப்பட உள்ளது.
யுஎஸ் இன்டர்நேஷனல் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (DFC) இயக்குநர்கள் குழு, டாடா பவர் ரினியூவபிள் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான TP சோலார் லிமிடெட் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைக்க உள்ள கிரீன்ஃபீல்ட் 4.3 GW சோலார் செல் மற்றும் மாடியூல் உற்பத்தி தொழிற்சாலைக்கு சுமார் 425 மில்லியன் டாலர் வரையிலான நிதியுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை திங்கள்கிழமை டாடா பவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த சோலார் செல் மற்றும் மாடியூல் உற்பத்தி தொழிற்சாலை 4.3 ஜிகாவாட் திறன் கொண்டது. இதன் மூலம் சோலார் செல் மற்றும் மாடியூல் உற்பத்தி டாடா குழுமம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உடன் நேருக்கு நேர் மோத உள்ளது.
அமெரிக்காவின் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் என்பது அமெரிக்காவின் வளர்ச்சி நிதி நிறுவனமாகும், இது முதன்மையாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதியுதவி செய்கிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் விரைவில் அமைய உள்ள சோலார் உற்பத்தி ஆலையின் முதல் மாடியூலின் உற்பத்தி இந்த ஆண்டு இறுதிக்குள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. FY24 முதல் காலாண்டில் முதல் செல் உற்பத்தி எதிர்பார்க்கப்படுகிறதாக என்றும் TP சோலார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைய உள்ள சோலார் உற்பத்தி ஆலையின் மூலம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ 2000 க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, பெரும்பாலான ஊழியர்கள் உள்ளூர் பகுதிகளைச் சேர்ந்த பெண் ஊழியர்களாக இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டாடா பவர் நிறுவனம் தனது கிளீன் மற்றும் கிரீன் எனர்ஜி உற்பத்தியை 2030 ஆம் ஆண்டிற்குள் 38 சதவீதத்திலிருந்து 70 சதவீதமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதனால் கிளீன் மற்றும் கிரீன் எனர்ஜி உற்பத்தியை விரிவுபடுத்த உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
டாடா பவர் நிறுவனத்தின் ரினியூவபிள் எனர்ஜி போர்ட்ஃபோலியோ தற்போது 7.8 ஜிகாவாட் ஆக உள்ளது, திருநெல்வேலியில் செயல்படுத்தும் 4.1 ஜிகாவாட் திட்டம் மற்றும் தற்போது கட்டுமான பணியில் 3.6 ஜிகாவாட் திட்டம் உள்ளது. டாடா பவர் நிறுவனம் ஏற்கனவே பெங்களூருவில் தலா 500 மெகாவாட் திறன் கொண்ட சோலார் செல் மற்றும் மாடியூல் உற்பத்தி ஆலையை இயக்கி வருகிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications