இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக குழுமங்களில் ஒன்றான டாடா குழுமத்தில் ஒன்று தான் டாடா பவர். இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று மட்டும் 9% மேலாக அதிகரித்துள்ளது.
சரி என்ன காரணம்? இந்த நிறுவன பங்கின் விலையானது இன்று 52 வார உச்சத்தினை தொட்டுள்ளது. ஏன்? தற்போது இந்த பங்கின் விலை எவ்வளவு? வாருங்கள் பார்க்கலாம்.
டாடா பவரின் பங்கு விலையானது அதன் 52 வார உச்சமான 84.60 ரூபாயினை தொட்டுள்ளது.
இரு நிறுவனங்களின் பங்குகள் கையகப்படுத்தல்
இந்த கிடுகிடு ஏற்றமானது டாடா பவர் நிறுவனம், Tp southern odisha distribution limited (TPSODL) மற்றும் Tp western odisha distribution limited (TPWODL) நிறுவனங்களில் முறையே 51 சதவீதம் பங்குகளை கைபற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது. டாடா பவரின் பங்கு விலையானது தொடக்கத்திலேயே 3.24 சதவீத ஏற்றத்தில் தொடங்கி 84.50 ரூபாயாக இருந்தது. எனினும் பின்னர் மீண்டும் 3.36% ஏற்றம் கண்டு 84.6 ரூபாயாகவும் ஏற்றமும் கண்டது.
பங்கு விலை நிலவரம்
இதே முந்தைய அமர்வில் டாடா பவரின் முடிவு விலையானது, பிஎஸ்இ-யில் 81.85 ரூபாயாக முடிவுற்றது. எனினும் இன்றைய சந்தை அமர்வில் இந்த பங்கின் விலையானது குறைந்தபட்சமாக 82.65 ரூபாயினை தொட்டது. இதற்கிடையில் ஒரு வாரத்தில் டாடா பவரின் பங்கு விலையானது 7% ஏற்றமும். இதே ஒரு மாதத்தில் 15% ஏற்றமும் கண்டுள்ளது.
பங்கு விலை அதிகரிக்கலாம்
இதே இந்த பங்கின் விலையானது 5, 20, 50, 100, 200 நாள் மூவிங் ஆவரேஜிக்கு மேலாக வர்த்தகமாகி வருகின்றது. இந்த பங்கின் விலையானது ஒரு வருடத்தில் 45% ஏற்றம் கண்டுள்ளது. இதனால் இந்த பங்கின் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கொண்டு இந்த முதலீடு இந்த நிறுவனத்திற்கு இன்னும் சாதகமான வளர்ச்சியினைக் கொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வளவு முதலீடு?
இதற்கிடையில் இந்த கையகப்படுத்தல் குறித்து டாடா பவர் பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில், Tp southern odisha distribution limited (TPSODL) மற்றும் Tp western odisha distribution limited (TPWODL) என்ற இரு நிறுவனங்களில் முறையே 51 சதவீதம் பங்குகளை கைபற்றியுள்ளதாகவும், இதன் மூலம் முறையே ஒவ்வொரு நிறுவனத்திலும் 127.50 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாகவும், மொத்தத்தில் 255 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மீதமுள்ள 49% பங்கு யாரிடம்?
மேற்கண்ட இந்த நிறுவனங்களில் உள்ள மீதமுள்ள 49 சதவீத பங்குகளை அரசுக்கு சொந்தமான GRIDCO நிறுவனம் வைத்திருக்கும். இந்த இணைப்பு நீண்டகால நோக்கங்களை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டது. இந்த கையகப்படுத்தல் மூலம், இந்த நிறுவனத்தின் விநியோக வட்டங்கள் ஒடிசாவின் மேற்கு பகுதி முதல் தெற்கு பகுதி வரை விரிவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications