டாடா பவர் சோலார் நிறுவனத்திற்கு அரசு நிறுவனமான தேசிய அனல் மின் நிலையத்தின் (NTPC) மூலம் 1,200 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் கிடைத்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள அரசுக்கு சொந்தமான மிகப்பெரிய மின்சார உற்பத்தி நிறுவனமான என்டிபிசி, டாடா பவர் சோலார் நிறுவனத்திற்கு, 320 மெகாவாட் மதிப்புள்ள சோலார் திட்டத்திற்கு 1,200 கோடி ரூபாய் ஆர்டர் கொடுத்துள்ளதாக, டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்திற்கான வணிக செயல்பாட்டு தேதி மே 2022 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டாடா பவர் மீதான நம்பிக்கை
இது குறித்து பேசிய டாடா பவர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகரியான பிரவீர் சின்ஹா, நாடு முழுவதும் பசுமை எனர்ஜியினை உற்பத்தி செய்வதில் டாடா பவர் முன்னிலையில் உள்ளது. இது டாடா பவரின் திறன் மற்றும் செயல்பாட்டின் நம்பிக்கை போன்றவற்றை நிரூபிக்கிறது.
செயல்பாட்டில்
டாடா சோலார் பவர் நிறுவனம் அனந்தபூரில்150 மெகாவாட் திறனும், கேரளாவின் காசர்கோடில் 50 மெகாவாட் திறனும், கிரீன்கோ 56 மெகாவாட் திறனோடும், ஒடிசாவின் லபாங்காவில் 30 மெகாவட்டும், காயல்குளத்தில் 105 மெகாவாட்டும்( செயல்படுத்தப்பட்டு வருகிறது) இதே குஜராத்தில் நடந்த ஏலத்தில் 400 மெகாவாட் திறனுக்குமான திட்டத்திலும் வென்றுள்ளது.
டாடா பவரின் பங்கு விலை
இதற்கிடையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று முடிவின் படி இந்த பங்கின் விலையானது 4.34 சதவீதம் வீழ்ச்சி கண்டு 79.40 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் இந்த ஒப்பந்தத்தின் அறிவிப்பானது சனிக்கிழமையன்று வந்துள்ள நிலையில், இதன் எதிரொலியானது நாளை சந்தையில் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
52 வார உச்சம்
ஒரு ஆண்டில் இதன் பங்கி விலையானது 34.23 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. இதே மூன்று மாதத்தில் 44.10 சதவீதமும், 1 மாதத்தில் 10.82 சதவீதமும், கடந்த ஒரு வாரத்தில் -7.19% வீழ்ச்சியுடனும் காணப்படுகிறது. டாடா பவர் நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த ஜனவரி மாதத்தில் இரு நிறுவனங்களின் பங்குகளை வாங்கிதாக அறிவித்த பிறகு, அதன் பிறகு 52 வார உச்சத்தினை தொட்டது.


Click it and Unblock the Notifications