டாடா குழுமம் உப்பு முதல் சாப்ட்வேர் வரை பல்வேறு துறைகளில் வர்த்தகம் மேற்கொண்டு வருகிறது. இந்த குழுமத்தை சேர்ந்த டாடா பவர் நிறுவனம் மின் உற்பத்தி மற்றும் மின் விநியோகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் துணை நிறுவனம் டிபி சோலார். இந்த துணை நிறுவனம் சோலார் பேனல்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. டிபி சோலார் நிறுவனம் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்திடம் இருந்து ரூ.632 கோடி மதிப்பிலான 292.5 மெகா வாட் சோலார் தொகுதிகளை வழங்குவதற்கான ஆர்டரை பெற்றுள்ளது.
துணை நிறுவனம் பெரிய ஆர்டரை பெற்று இருப்பது டாடா பவர் சாதகமான ஒன்றாகும். இதனால் முதலீட்டாளர்கள் இன்றைய வர்த்தகத்தில் டாடா பவர் நிறுவன பங்கின் மீது கவனம் செலுத்தலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே டாடா பவர் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.81 சதவீதம் குறைந்து ரூ.337.10ஆக இருந்தது. நேற்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் இந்நிறுவன பங்கின் விலை ரூ.343.30ஆக இருந்தது.

டாடா பவர் நிறுவனம் 2024 டிசம்பர் காலாண்டில் வருவாயாக ரூ.5,731.00 கோடி ஈட்டியுள்ளது. மேலும் அதே காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.977.92 கோடி சம்பாதித்துள்ளது. ட்ரெண்ட்லைனின் கூற்றுப்படி, பெரும்பாலான நிபுணர்கள் டாடா நிறுவன பங்கு தொடர்பான மதிப்பீட்டை வைத்திருக்கலாம் என்றே வைத்துள்ளனர்.11 பேர் வலுவான வாங்குதல் மற்றும் வாங்கலாம் என்று மதிப்பீட்டுள்ளனர். ஒருவர் வைத்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். மற்ற ஆய்வாளர்கள் விற்பனை மற்றும் வலுவான விற்பனை என டாடா பவர் நிறுவனத்துக்கு ரேட்டிங் கொடுத்துள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளில் டாடா பவர் நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 596.35 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கின் விலை 56.05 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. அதேசமயம் இந்நிறுவனம் துறை மற்றும் தொழில்துறையை விட சிறந்த 1 வருட வருமானத்தை கொண்டுள்ளது. ஆனால் சென்செக்ஸ் மற்றும் நிப்டி 50 ஆகியவற்றுடன் ஒப்பிட்டால் இந்நிறுவனம் மோசமான வருமானத்தை கொண்டுள்ளது.
Story written :subramanian


Click it and Unblock the Notifications